News
Loading...

சீறும் எரிமலை

சீறும் எரிமலை

ரோமானிய நெருப்புக்கடவுளான வல்கன் பெயரிலிருந்தே எரிமலையைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான வல்கனோ உருவானது.

எரிமலையிலிருந்து கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டைஆக்சைடு, ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃப்ளூரைடு, ஹைட்ரஜன் சல்பைடு உள்ளிட்ட வாயுக்கள் நீராவியோடு சேர்ந்து வெளியேறுகின்றன. 

எரிமலைக் குழம்பிலிருந்து பெறப்படும் பியூமிஸ் எனும் மாக்கல், வறண்ட சருமத்தை சீராக்க சலூன்களில் பயன்படுத்தப்படுகிறது. எரிமலைகளின் கூரைகள் முக்கோண வடிவம் தவிர்த்து, சுழல், கேடயம் என பல்வேறு டிசைன்களில் காணப்படுகின்றன.உலகில் 20 பேரில் ஒருவர் எரிமலையினால் பாதிக்கப்படும் வகையில் அதன் அருகிலுள்ள நிலங்களில் வாழ்கிறார். 

எரிமலையின் உள்ளிருக்கும் உருகிய மேக்மா பாறைக்குழம்பு, வெளியே லாவாவாக மாறி ஓடி வரும்போது அதன் வெப்பநிலை எவ்வளவு தெரியுமா?  1250 டிகிரி செல்சியஸ். உலகின் 90 சதவிகித எரிமலை களுக்கு(452) இருப்பிடமாக, பசிபிக் கடல் பகுதியில் ரிங் ஆஃப் பயர் (40,000 சதுர கி.மீ) பகுதி அமைந்துள்ளது. இங்கு நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்புகளும் வெகு சகஜம். உலகில் 1900 எரிமலைகள் இன்றுவரை தொடர்ந்து இயங்கி எப்போதும்  வெடிக்கலாம் என மரணபீதியை கிளப்பி வருகின்றன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...