News
Loading...

அதிபருக்கு போட்டியிட்டதிலேயே ஹிலாரி போல் ஊழல்வாதி எவருமில்லை: டிரம்ப் கடும் சாடல்

அதிபருக்கு போட்டியிட்டதிலேயே ஹிலாரி போல் ஊழல்வாதி எவருமில்லை: டிரம்ப் கடும் சாடல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில் ‘ஹிலாரி போல் ஊழல் பேர்வழி வேறு எவரும் அல்லர்’ என்று குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவரை வெள்ளை மாளிகைக்கு தேர்வு செய்தால் அமெரிக்க அரசமைப்பு நெருக்கடி பெரிய அளவில் ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். 

மேலும் அவர் பேசுகையில், “கிளிண்டன்கள் மீதான வரலாற்றுப் புத்தகங்களை மூட வேண்டிய நேரம் வந்து விட்டது, நம் நாட்டின் மகா குடிமக்கள் குறித்த பிரகாசமான புதிய அத்தியாயத்தைத் திறக்க வேண்டியுள்ளது. 

அமெரிக்க அதிபராக முயலும் மிகப்பெரிய ஊழல்வாதி ஹிலாரி கிளிண்டன். அவர் மீது இரண்டுக்கும் மேற்பட்ட விசாரணைகள் உள்ளன. பல குற்றங்களை இழைத்துள்ளார். 

ஒபாமாவும் தோல்வியடைந்த தலைமையும்

பராக் ஒபாமாவிம் 8 ஆண்டுகால ஆட்சி தோல்வியடைந்த ஆட்சியாகும். புதிய திசையை நோக்கிப் பயணிக்க குடியரசுக் கட்சி அதிபரைத் தேர்ந்தெடுங்கள். காங்கிரஸில் குடியரசு பெரும்பான்மையை அளியுங்கள் பிறகு நாங்கள் உடைந்த இந்த அமைப்பை மாற்றி அமெரிக்காவை மீண்டும் கிரேட் ஆக்க போவதை நீங்கள் பார்ப்பீர்கள்.

அமெரிக்க மக்கள் இழந்த அதிகாரத்தை மீண்டும் பெற இது ஒரு பொன்னான வாய்ப்பு. குடியரசுக் கட்சி அதிபர், குடியரசு பேரவை மற்றும் செனேட் ஆகியவை இருந்தால் அமெரிக்க மக்களுக்கு தகுதியான மாற்றங்கள் செய்யப்படும்.

25 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மத்தியதர வர்க்கத்தினர் மீதுள்ள வரியை 35% குறைப்போம். ஒபாமாகேர் என்ற ஒட்டுமொத்த சீரழிவை துடைத்து எறிவோம்.

சட்டவிரோத புலம்பெயர்வுகளை தடுப்போம், புகலிட நகரங்களை புகமுடியா நகரங்களாக்குவோம் சிரியா அகதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர், ஹிலாரி அதனை 600% அதிகரிப்பார். 

சீரழிந்து வரும் நமது ராணுவத்தை மறுகட்டுமானம் செய்வோம். குற்றங்கள், வறுமையை அகற்றுவோம். 

இவ்வாறு பேசினார் டிரம்ப்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.