News
Loading...

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு?: குன்னூரில் உறவினர்கள் சாலை மறியல்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு?: குன்னூரில் உறவினர்கள் சாலை மறியல்

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாகக் கூறி, குன்னூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் குயில்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காய்ச்சல் காரணமாக, குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்றார்.

வீட்டுக்குச் சென்ற பிறகு, அவரின் உடலில் தீக்காயங்கள்போல் கொப்பளங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.

குன்னூரில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதில், பெண்ணுக்கான மருத்துவச் செலவு தொகையில் 75 சதவீதம் தருவதாக ஒப்புக்கொண்டனராம். ஆனால், தொகை குறைத்து வழங்கப்பட்டதாம்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி கவிதா உயிரிழந்தார். இதையடுத்து, மருத்துவரின் குடியிருப்புப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும், நிவாரணத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் குயில்ஹில்லில் உள்ள கவிதாவின் வீடு முன்பு சடலத்தை வைத்து, உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குன்னூர் வட்டாட்சியர் ஜான் மனோகர் குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தமிழ் ஆகியோர், மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இழப்பீடுக்கான காசோலை அளிக்கப்பட்ட பின்னர், போராட்டம் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை..

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.