News
Loading...

பிரகாஷ் ராஜ் மேலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார்

பிரகாஷ் ராஜ் மேலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார்
புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் முன் ஆலோசனையில் நிற்கும் பிரகாஷ் ராஜ்

தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் மிகவும் வறுமையில் இருக்கும் கிராமங்களை தத்தெடுத்து தங்களது சொந்த செலவில் அந்த ஊரில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சுத்தப்படுத்தி வருகின்றனர். 
அதனால் தான் தொழில்துறையில் தமிழகத்தை விட அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள்.

ஜெ. அராஜக ஆட்சியால் தமிழகத்தில் எந்த நடிகரும் ஏழைகளுக்கு உதவ முன்வருவதில்லை. விஜய் தலைவா படத்திற்கு தந்த தொல்லைகள் அனைவரும் அறிந்ததே, கடந்த வருடம் சென்னை வெள்ளத்தை பற்றி கேள்வி எழுப்பிய கமலை கண்டித்து பன்னீர் செல்வம் பக்கம் பக்கமாக அறிக்கை விட்டு கமலை ஒடுக்கினார்கள்.

தன்னை தவிர வேறு யாரும் நல்லவர்களாக மக்கள் மத்தியில் உருவாகிவிடக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் இலட்சியம்...

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகில் உள்ள கம்மடனம் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமலும் அடிப்படை வசதிகள் இல்லாமலும் அவதிப்பட்டு வந்ததை அறிந்து, அந்த கிராமத்தை தத்தெடுத்து பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பிரகாஷ் ராஜ் மேலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார்
பள்ளி குழந்தைகளுடன் பிரகாஷ் ராஜ் உரையாடிய காட்சி

இதையடுத்து அந்த கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்தார். குழாய் கிணறு அமைத்து மின்சார மோட்டாரையும் பொருத்தினார். இதனால் அந்த கிராம மக்களுக்குந நீண்ட காலமாக இருந்து வந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தது.

இந்நிலையில் பிரகாஷ் ராஜ் மேலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டரெட்டிபள்ளி என்ற கிராமத்தை தத்தெடுத்து, அங்கு பாழடைந்து கிடந்த பள்ளிக்கூடத்தை சரிசெய்ய முடிவு செய்துள்ளார். நேற்று தனது குடும்பத்துடன் அங்கு சென்ற பிரகாஷ் ராஜ், விவசாயம் மற்றும் பள்ளிக்கூடம் கட்டும் பணியையும் மேற்பார்வை செய்தார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...