News
Loading...

மோடியின் அடுத்த அதிரடி? : பேங்கிங் டிரான்சாக்சன் வரி

மோடியின் அடுத்த அதிரடி? : 'பேங்கிங் டிரான்சாக்சன்' வரி

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, எதையும் செய்யத் தயாராக இருப்பதாக மோடி கூறி வருகிறார். சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 'இன்னும் பல திட்டங்கள் என் மனதில் உள்ளன' என, சொல்லியிருக்கிறார். 

அது என்ன புது திட்டம்? அரசியல்வாதிகள், அதி காரிகள் வட்டாரங்களில் சொல்லப்படுவது இது தான்: பிப்ரவரி மாதம் அரசு சமர்ப்பிக்க உள்ள மத்திய பட்ஜெட்டில், வருமான வரியை ஒழித்து விடுவராம். அதற்கு பதிலாக இரண்டு வரிகள் இருக்குமாம். 

ஒன்று:- நீங்கள் வங்கி மூலமாக வாங்கும் பொருட்களுக்கு வரி.- இதை, 'பேங்கிங் டிரான் சாக்சன்' வரி என்கின்றனர். இன்னொன்று: சரக்கு மற்றும் சேவை வரி. இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்பதோடு, வருமான வரி ஒழிந்தால் நடுத்தர வகுப்பினர் மிக சந்தோஷப்படுவர் என்பது பிரதமரின் திட்டம். 

இந்த விவகாரத்தில் இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. புனேவை சேர்ந்த அனில் என்பவர் தான் இந்த அதிரடி திட்டத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தாராம். 

இவரை நேரில் அழைத்து விவாதித்துள்ளாராம் மோடி. இந்த அனில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவராம். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...