News
Loading...

வட இந்தியாவின் கருப்பு உப்பு

வட இந்தியாவின் கருப்பு உப்பு

பணத்தில் மட்டும் அல்ல. உப்பிலும் கருப்பு உப்பு உள்ளது. 'கருப்பு உப்பு' என்னும் காலாநமக் வட இந்திய சமையலில் சேர்க்கப்படும் முக்கிய பொருள். இமயமலை மற்றும் நேபாளப் பகுதிகளில் மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இந்த உப்பு 'ஹிமாலயன் கருப்பு உப்பு' என அழைக்கப் படுகிறது. சோடியம் குளோரைடு இதன் அடிப்படைப்பொருளாக இருப்பதால் கருப்பு உப்பிற்கு உப்புச்சுவை உள்ளது. கிரிகைட் போன்ற வேதிப்பொருட்கள் இதற்கு கருப்பு நிறத்தையும், சுவையையும் தருகின்றன. முட்டை மணமுள்ள இந்த உப்பு முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்படுகிறது.. நெஞ்சு எரிச்சலுக்கு மருந்தாக கருப்பு உப்பு பரிந்துரை செய்யப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...