News
Loading...

குட்டிச்சுவர் சிந்தனைகள்

குட்டிச்சுவர் சிந்தனைகள்

நாட்டுல ராக்கெட் சயின்ஸைக் கூட கொஞ்சம் கஷ்டப்பட்டா புரிஞ்சுக்கலாம். ஆனா பெண்கள் தைக்கிற ஜாக்கெட் சயின்ஸை அந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ, தாமஸ் ஆல்வா எடிசனோ நினைச்சாக்கூட அவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியாது.

பல கோடி ரூபாய் செலவு பண்ணி விடுற ராக்கெட் ஃபெயிலியர் ஆனாக்கூட இவ்வளவு சோகம் இந்தியா முழுக்க வராது. ஆனா தைக்க கொடுத்த ஜாக்கெட் ஃபெயிலியர் ஆனா மொத்த வீடும் துக்க வீடாயிடும். பெண்களுக்கான 33% சதவீத இடஒதுக்கீடு மசோதாவை விட, இந்த லோக்பால் மசோதாவை விட, அதிக முறை ஆல்ட்ரேஷன் போவது பெண்கள் தைக்கிற ஜாக்கெட்தான். 

‘இன்னமும் கல்யாணமாகலையே’ங்கற கவலைல ஆரம்பிச்சு, ‘ஏன்டா கல்யாணம் பண்ணினோம்’னு சரக்கடிக்கிற கட்டிங் கவலை வரைக்கும் ஆண்களுக்குப் பல கவலைகள் உண்டு. ஆனா பெண்களுக்கு பெரும் கவலை, ஜாக்கெட்டின் ஃபிட்டிங் கவலை மட்டும்தான். இந்தியத் திருநாட்டில் சன்னி லியோனைத் தவிர எல்லா பெண் லயன்களும் ஜாக்கெட் பிரச்னையால் அவதிப்படுறாங்கன்னு ஒரு கருத்துக்கணிப்பு சொல்லுது. 

ஆயிரமாயிரம் கிலோ மீட்டர் ஓடப் போற வண்டிக்குக் கூட அஞ்சு நிமிஷத்துல வீல் அலைன்மென்ட் பார்த்திடுவாங்க. ஆனா அரை கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்ள இருக்கிற இடங்களுக்குப் போற பெண்களின் ஜாக்கெட்டுக்கு அலைன்மென்ட் பார்க்கிறதுக்குள்ள கலியுகம் முடிஞ்சு கடைசி யுகம் வந்திடும். கோடிக்கணக்கில் காசு போட்டு கட்டுற பில்டிங்கை விட பிளவுஸுக்குத்தான் வாஸ்து சரியா இருக்கணும். ஜன்னல் கதவு, வென்டிலேஷன்னு ஆரம்பிச்சு, இப்ப ஜாக்கெட்டுக்குள்ள மழை நீர் சேமிப்புத் தொட்டி கட்டுற வரைக்கும் கிளம்பிட்டாங்க. 

எறும்பு தனது எடையில் எட்டு மடங்கை தூக்கிட்டுப் போகுமாம். அதுக்குப் பிறகு பலசாலின்னா அது நம்ம ஜாக்கெட்தான்... ஐம்பது ரூபா துணிக்கு தையல் கூலி எண்ணூறு ரூபா. இந்தியாவுல தொழில் தெரியாத போலி டாக்டர் கூட ஒரு பாடில ஒரு தடவைக்கு மேல கத்தரி வைக்க மாட்டாரு; ஒன்பது தடவைக்கு மேல உடம்பை தைக்க ஊசி கோர்க்க மாட்டாரு. 

ஆனா, எப்படியும் ஆல்ட்ரேஷனுக்கு திரும்பித் தானே வரப்போகுதுன்னு ஏனோதானோன்னு ஒரு ஜாக்கெட் தைக்கிற டெய்லர் கூட எண்ணூறு தடவை அதைப் பிரிச்சு தைச்சிடுவாரு. நாட்டுல அவனவன் gas டிரபுள், case டிரபுள்னு கஷ்டப்படுறான்... ஆனா இதையெல்லாம் விட பெரிய கஷ்டம், ஜாக்கெட்ல வர்ற லூஸ் டிரபுள்தான்.  

‘ரைட் சைடு டைட்டா பிடிச்ச மாதிரி இருக்கு’, ‘லெஃப்ட் சைடு டைட்டா பிடிச்ச மாதிரி இருக்கு’ன்னு சொல்லுமே தவிர... கடைசி வரை ஒரு பொண்ணு மொத்த ஜாக்கெட்டும் தனக்குப் பிடிச்ச மாதிரி இருக்குன்னு மட்டும் சொல்லாது.  ஒரு பொம்பளைக்கு பிடிச்ச மாதிரி பிளவுஸ் தைக்கிறதுக்குள்ள, ஊரப்பாக்கம் பக்கம் ரெண்டு கிரவுண்ட் நிலம் வாங்கி பியூட்டிஃபுல்லா ஸ்விம்மிங் பூலோட ஒரு ஹவுஸ் கட்டிடலாம். 

ஐயாயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆட்டைக்கூட பிடிச்சமேனிக்கு வெட்டிடலாம், ஐந்நூறு ரூபாய் மதிப்புள்ள பிறந்த நாள் கேக்கைக்கூட கைக்கு வந்தபடி வெட்டிடலாம், ஆனா அம்பது ரூபா மதிப்புள்ளா பிளவுஸ் துணிய வெட்டத்தான் ஆயிரம் முறை அளவெடுத்து வெட்டணும்னு அங்கோலா அறிஞர் ஒருவர் சொல்லியிருக்காராம். ஆண்களில் அதிகமாக திட்டு வாங்கியது டெய்லர்களாதான் இருக்கும் என்கிறது ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையம். கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளானது, ஜாக்கெட் தைக்கும் டெய்லர்கள்தான். தீபாவளி முடிந்து இப்போ நிம்மதியாக இருக்கும் அவர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ரியல் சுதந்திர தின வாழ்த்துகள்.

போலியோவைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கோம், ஆனா இந்த ஆறு மாசமா எட்டு திசையிலும் மோளம் கொட்டி வரும் வார்த்தை, ‘பேலியோ’. கண்டபடி காசை செலவு செஞ்சு கண்டதையும் சாப்பிட்டு ஏத்துன உடம்பை, மீண்டும் அதை விட பணத்தை அதிகமா செலவு பண்ணி நான்வெஜ்ஜா மட்டும் வாங்கி சாப்பிட்டு உடம்பு இளைக்கிற அற்புதமான முறைதான், பேலியோ டயட். ரொம்பவே காஸ்ட்லியான டயட் என்பதால பேங்குகளில் பர்சனல் லோன் மாதிரி ‘பேலியோ டயட் லோன் தரலாம்’னு முடிவெடுத்து இருக்காங்களாம். பேலியோ டயட் ஃபேமஸ் ஆவதைப் பார்த்தால், சைவ சாப்பாட்டுக்கு அம்மா உணவகம் மாதிரி அசைவம் சாப்பிட ‘அம்மா பேலியோ டயட்டகம்’ வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

நாட்டுல இந்த ஜாதிப் பேரைச் சொல்லி புகழ் பெறணும்னு கிளம்புற கோஷ்டிங்க அதிகமாயிட்டாங்க. ‘பாதி மூளைதான் வச்சிருக்கானுங்க... சரி, ஜாதிப் பேரை சொல்லி பொழைச்சுப் போகட்டும்’னு விட்டா, இவனுங்க எப்பவோ வாழ்ந்த அவங்க குல மேன்மக்களை வச்சு திரிக்கிற கதை இருக்கே... ஒவ்வொண்ணும் ஒரு டன் அணுகுண்டு. 

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எதிராக சண்டையிட்ட ஹிட்லருக்கு துப்பாக்கி குண்டு தீர்ந்து விட, அவங்க முப்பாட்டன்தான் அவசரத்துக்கு 2 குண்டு கொடுத்து உதவினார்னு ஒருத்தன் ஆரம்பிக்கிறான். இன்னொருத்தனோ, அவங்க ஊருல செகண்ட் ஷோ பார்த்துட்டு வர்ற மக்களின் சைக்கிள்கள் அடிக்கடி பஞ்சராகிப் போக, மக்கள் அவதிப்படுவதைக் கண்டு அந்த ஜில்லா சைக்கிள்களுக்கெல்லாம் தன் சைக்கிள் போலவே ட்யூப்லெஸ் மாத்தித் தந்தவர் எங்க முப்பாட்டன்னு கொண்டு போறான். 

இன்னொருத்தன் இந்தியா- இலங்கையை சேர்த்த ராமர் பாலத்தில் ரெண்டு பக்கமும் தெரு விளக்கு போட்டுக்கொடுத்தது அவங்க சாதிதான்னு நடு சென்டர்ல நிக்கிறான்.  இதெல்லாம் கூட பரவாயில்ல... இன்னொருத்தன் இன்னமும் மேல போயி, இருந்தாரா பிறந்தாரான்னே தெரியாத போதி தர்மர்தான் எங்க தாத்தான்னே அறிக்கை விட்டுட்டான்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.