News
Loading...

சுங்கம் மற்றும் கலால்துறை பெண் உயர் அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது

சுங்கம் மற்றும் கலால்துறை பெண் உயர் அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது

சென்னையில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் சுங்கம் மற்றும் கலால்துறை பெண் உயர் அதிகாரி லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய ரூ.500 மற்றும் 1000 ஆயிரம் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8 ம் தேதி அறிவித்தது. இதையடுத்து பதுக்கப்பட்ட கறுப்பு பணம் வெளியே வரும் என்பதால் தொடக்கம் முதலே சிபிஐ அதிகாரிகள் நாட்டில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அலுவலகங்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சென்னையில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சுங்கம் மற்றும் கலால்துறை முதன்மை ஆணையர் ஜானகி அருண்குமாரின் வீடும் ஒன்றாகும். ஐஏஎஸ் அதிகாரியான ஜானகி அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே சென்னையை அடுத்து மணலி அருகே 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருள் 24 கிலோ எடைக்கொண்டதாகும். அதன் மதிப்பு ஏறத்தாழ ரூ.5 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதே கும்பல் விரைவு தபாலில் அனுப்பியிருந்த தடைசெய்யப்பட்ட மாத்திரைகளையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். காரில் கடத்த முயன்ற கடத்தல் காரர்களை செங்கல்பட்டு அருகே வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மடக்கினர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...