News
Loading...

தாலிக்கு தங்கம் திட்டத்தில் முறைகேடு :CBI விசாரணைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்


மிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து வாரஇதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின் இந்த திட்டத்திற்காக சந்தை மதிப்பை விட அதிக விலை கொடுத்து தங்கம் கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு தங்க நாணயத்திற்கு ரூ.506-ல் இருந்து ரூ.3,467 வரை அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிராமுக்கு ரூ.1,303-ல் இருந்து ரூ.2,362 வரை அதிக விலை கொடுத்து தங்கம் வாங்கியதன் மர்மம் என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ.111 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...