News
Loading...

I.C.U.விலிருந்து தனியறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றம்

I.C.U.விலிருந்து தனியறைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றம்

அப்போலோ மருத்துவமனையில், முதலமைச்சர் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 55 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, சிகிச்சைக்குப் பின் முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். அவர் விரும்பும் போது வீட்டிற்கு செல்லலாம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அப்போலோ மருத்துவமனை வாயிலில் கூடிய அதிமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர்.

English Summary : Chief minister Jayalalithaa shifted to Normal Ward in apollo hospital

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...