News
Loading...

புதிய 2000 ரூபாய் நோட்டில் கவர்னர் கையெழுத்தில் சர்ச்சை

புதிய 2000 ரூபாய் நோட்டில் கவர்னர் கையெழுத்தில் சர்ச்சை

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அதற்கு மாற்று வழியாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.

புதிய   2ஆயிரம் நோட்டு வந்ததில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளியடப்பட்டுள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆனால், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்திலும், புதிய ரிசர்வ் வங்கி கவர்னரான உர்ஜித் படேல் கையெழுத்தே உள்ளது.

இவர் கவர்னராக பொறுப்பேற்று 65 நாட்கள் தான் ஆகிறது. அதாவது இவர் கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி தான் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார்.

அவ்வாறு இருக்கையில், புதிய நோட்டுகள் 6 மாதத்திற்கு முன்னதாக அச்சடிக்கப்பட்டிருந்தால் அப்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் கையெழுத்தல்லவா இருந்திருக்க வேண்டும்.

இவர் கையெழுத்து எப்படி வந்தது என சந்தேகம் எழுப்பி பெரும்பாலானோர் சமூக வலைதளத்தில் பதிவுகளை மேற்கொள்கின்றனர்.

English Summary : Controversy over the governor's signature on the new Rs. 2000 note

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்