News
Loading...

கலாய்த்தவர்களுக்கு பதில் கொடுத்த கோபிநாத்!

கலாய்த்தவர்களுக்கு பதில் கொடுத்த கோபிநாத்!

விஜய் டிவியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலங்களை கலாய்ப்பதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். ஆனால், அதே விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் கோபிநாத், சின்னத்திரை நிகழ்ச்சி மட்டுமின்றி தான் நடித்த நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களிலும் கோட் அணிந்து நடித்ததால், இணையவாசிகள் ஆளுக்கொரு கருத்து சொல்லி அவரை கலாய்த்து வருகின்றனர். ஆரம்பத்தில இதை கண்டுகொள்ளாத அவர், தன்னை கலாய்ப்பது தொடர்வதால் தற்போது அதற்கு பதில் கொடுத்துள்ளார்.

அதுகுறித்து கோபிநாத் கூறுகையில், எனக்கு கோட் அணிவது சுத்தமாக பிடிக்காத விசயம். ஆனால், சேனல் நிகழ்ச்சி நடத்தும்போது எனக்கு மைக் கொடுக்கப்பட்டிருக்கும். அது வெளியில் தெரிந்தால் நன்றாக இருக்காதே என்று அதை மறைப்பதற்காகவே முதலில் கோட் அணிந்தேன். ஆனால் இப்போது அதுவே தொடர்ந்து வருகிறது. கோபிநாத் என்றாலே கோட் என்றாகி விட்டது. அதனால் அதை தொடர்ந்தாக வேண்டிய கட்டாயமாகி விட்டது என்கிறார் கோபிநாத்.

English Summary : gave a trun back to the people how made fun anchor gopinath

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...