News
Loading...

சூரி IN Download மனசு

சூரி IN Download மனசு

சினிமாவைப் புரிந்துகொள்வது

சினிமா என்ன வேணும்னாலும் செய்யும். வருஷக்கணக்கில் காக்க வைக்கும். தற்கொலைக்கான இக்கட்டுலகூட நிறுத்தும். தாக்குப் பிடிச்சு நிக்கிறவனை தாய் மாதிரி அரவணைச்சுக்கும். ‘இதுக்குத்தானடா போராடுன’ன்னு கேட்டு உலகத்து வெளிச்சத்தை எல்லாம் நம்ம மேல பாய்ச்சும். இதெல்லாம் நம்ம குணத்தை மாத்தாம இருக்கணும். வெற்றிங்கிறதுகூட சுலபம். அந்த வெற்றியைத் தக்க வைக்கத்தான் ெவறித்தனமா போராடணும். மக்களோட கைதட்டல்தான் நம்ம உயரத்துக்குக் காரணம்ங்கிற உண்மை நெஞ்சுல உறைக்கணும். அவங்க நம்மளை மதிக்கிற மாதிரி நாமளும் அவங்களை மதிக்கணும். பழசை மறக்காம, வானத்துல மெதக்காம இருந்தோம்னா, சினிமா என்னிக்கும் நம்மளைக் கைவிடாது.

அதிர்ந்தது

மனசாட்சியே இல்லாம பெண்கள் மேல நடத்தப்படற கொடூரங்கள் என்னைக் குலை நடுங்க வைச்சிடுச்சு. விருப்பப்பட்ட பெண் கிடைக்கலைன்னு வெட்டிக் கொல்ற கலாசாரம் உருவாகி இருப்பதைத் தாங்கிக்கவே முடியலை. நிச்சயமான பெண்ணை சர்ச்சுக்குள்ளேயே போய் வெட்டி வீசிய கொடுமை, பொண்ணைப் பெத்த ஒவ்வொரு தகப்பனையும் தத்தளிக்க வைச்சிருக்கும்.தாயா, மகளா, பாட்டியா, பேத்தியா நம்ம ஆசாபாசங்களோட அத்தனை உருவமாகவும் இருப்பது பெண்தான். ஒரு பெண் நம்மை நிராகரிச்சா, அவங்களே நிமிர்ந்து பார்க்கிற அளவுக்கு நாம வளர்ந்து காட்டணும். நம்மளை ஏற்காதவர்களை எல்லாம் வெட்டணும்னு நினைச்சா, எந்த உசுரும் இங்க இருக்க முடியாது.

பொக்கிஷம்

குழந்தைகள்

சூரி IN Download மனசு
பாதித்த விஷயம்

ஜல்லிக்கட்டு தடை. மகன், மகளைவிட மாடுங்க முக்கியம்னு நினைக்கிறதுதான் நம்ம குடும்பம். யாராலும் அடக்க முடியாத காளை, இப்பவோ அப்பவோன்னு இருக்கிற ஒரு கிழவியோட வார்த்தைக்கு பொட்டிப் பாம்பா அடங்கிப் போகும். அதுதான் பாசம். அதுதான் வளர்ப்பு. ஜல்லிக்கட்டு நல்லதா, கெட்டதான்னு கோர்ட்ல உட்கார்ந்து பேசறதைவிட. இங்க இருக்கிற ஒவ்வொரு குடும்பத்துலயும் உட்கார்ந்து பேசணும்.

அறம்

நாம் என்னதான் கஷ்டத்துல தத்தளிச்சு நின்னாலும், நம்மளை சார்ந்தவங்களையும், நம்பியவங்களையும் சந்தோஷமா வைச்சுக்கணும்.

சூரி IN Download மனசு

கடைசியாக அழுதது

தனி ஈழத்துக்காக தம்பி முத்துக்குமார் தீக்குளிச்சு செத்துப்போனதைத் தாங்கவே முடியலை. ஈழத்துக்காக தன்னை எரிச்சுக்கிட்ட முத்துக்குமாரோட தியாகம் பல நாள் என்னைய தூங்கவிடலை. உண்மையான உணர்வும், அக்கறையும் உங்களுக்கும் எனக்கும் இருக்கு. ஆனா, நீங்களும் நானும் எதையும் செய்ய முடியாததுக்கு காரணம்... குடும்பம்! ஆனா, கூடப் பொறந்த தங்கச்சி நிறைமாச கர்ப்பவதியா நின்னதைக்கூட நினைச்சுப் பார்க்காமல் தன்னையே எரிச்சுக்கிட்டான் முத்துக்குமார். காவிரிக்காக நடுரோட்டில் எரிஞ்சு செத்த தம்பி விக்னேஷ் குடும்பமும் அவனையே ஆதாரமா நம்பி இருந்ததுதான். குடும்பத்தைவிட நாடு முக்கியம்னு நினைச்சு சாகுறவங்களைக் கடந்துதான் நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். எதையோ ெபரிசா சாதிச்சுடப் போற மாதிரி...

மறக்க முடியாத மனிதர்

அண்ணன் சுசீந்திரன். என்னைய பெத்தெடுத்த ரெண்டாவது கர்ப்பப் பை.

மீட்க விரும்பும் இழப்பு

அய்யா அப்துல் கலாம். எவ்வளவு உச்சத்துக்குப் போனாலும் எளிமையாவும், அன்பாவும் மக்களோட மக்களா இருக்கணும்னு வாழ்ந்து காட்டிய மனுசன். அவரை நேர்ல பார்த்துப் பேசணும், போட்டோ எடுத்துக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். ‘இங்கதானே இருக்கப் போறார், பொறுமையா போய்ப் பார்த்துக்கலாம்’னு  இருந்துட்டேன். அறிகுறி காட்டாம புயல் அடிக்கிற மாதிரி சட்டுன்னு அவரோட மரணம் நடந்திடுச்சு. இந்த இழப்பு எனக்கு மட்டுமில்ல, எல்லோருக்கும்தான்!

மிகச்சிறந்த நண்பன்

சிவக்குட்டி வெண்ணெய். ஆமா, இப்படித்தான் அவன் பேரை என் செல்போன்ல சேவ் பண்ணியிருக்கேன். அவன் சிவக்குமரன். நான் பொறந்த ராஜாக்கூர்ல பொறந்தவன். சின்ன வயசுல இருந்து இன்னிக்கு வரைக்கும் ‘திக்’கான பழக்கம். மைண்டுக்குள்ள ஏதாச்சும் டயலாக் தோணுறப்ப அதுக்கு எப்படிப்பட்ட ரியாக் ஷன் கிடைக்கும்னு நான் அணுகுண்டு சோதனை நடத்திப் பார்க்கிறது இவன்கிட்டத்தான். படத்துல எப்படி அந்த சிவா (சிவகார்த்திகேயன்)வுடன் ரத்தமும் சதையுமா திரியிறேனோ, அந்த மாதிரி நெஜத்துல இந்த சிவா கூட!

கற்ற பாடம்

நம்பிக்கைத் துரோகம். ‘இந்தக் காலத்தில நமக்கு ஒருத்தர் உதவி பண்றார்னா அவர் நம்மகிட்டே இருந்து பெரிசா எதையோ எதிர்பார்க்கிறார்னு அர்த்தம்ணே. சுயநலம் தேடாத உதவிகள் இப்போ கிடையாது’ன்னு ஒருத்தர் சொன்னார். நான் நம்பலை. தேடி வந்து உதவி பண்றதா சொன்ன நண்பர் என்னை நிலைகுலைய வைச்சப்பதான் அந்த வார்த்தைகளோட உண்மை புரிஞ்சது. தோற்றது நான் இல்ல,  என்னோட நம்பிக்கை. வலிய வருவது வரமாக இருந்தாலும், அது வேண்டாம்னு விலக்கி வைக்கிற பக்குவத்தை இப்போ நான் பழகியிருக்கேன். என்ன ஒண்ணு, இந்தப் பாடத்தைக் கத்துக்க ஃபீஸ் கொஞ்சம் ஜாஸ்தியாகிடுச்சு.

பயணம்

அம்மா, அப்பாவை அழைச்சுக்கிட்டு வெளிநாடு பறக்கணும். என்னை வயித்துலயும், மடியிலயும் சுமந்தவங்களை என் முதுகுல சுமக்கணும்.

கேட்க விரும்பும் கேள்வி

‘கந்தன் நெல் சாகுபடி செய்தான், நெல் கந்தனை சாகும்படி செய்தது’ன்னு ஒரு ட்வீட் படிச்சேன். செத்துட்டேன். நமக்காக வாய்க்கால், வரப்புல கிடந்து கஷ்டப்படுகிற விவசாய ஜீவன்களோட கண்ணீரை நாம எப்போ துடைக்கப் போறோம்ங்கிறதுதான் என் நெஞ்சை அறுக்கிற கேள்வி!

எடுக்க நினைக்கும் சினிமா

சினிமா எடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல. போராடிய காலத்தில் நண்பர்களோட சேர்ந்து, நாடகம் போடுவது வழக்கம். சந்தன மர வீரப்பன் பிரச்னை பெரிசா பேசப்பட்ட நேரத்துல ‘என்னாது, கோரிக்கையா?’ங்கிற நாடகத்தை நடத்தினேன். செம ரெஸ்பான்ஸ். ஆனா அந்த நாடகத்தோட வீடியோ கேசட்டைக் கூட வாங்க அப்ப எங்ககிட்டே பணம் இல்ல. அதே நாடகத்தை மறுபடியும் அரங்கேற்றணும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.