News
Loading...

சாக்ஷி மாலிக், ஜாக்குலின் உள்பட 1000 பெண்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை

சாக்ஷி மாலிக், ஜாக்குலின் உள்பட 1000 பெண்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை

ஒரே இடத்தில் அதிக பெண்கள் சிறப்பு உடற்பயிற்சி செய்யும் கின்னஸ் சாதனை முயற்சி மும்பையில் நேற்று நடந்தது.

சிலர் முற்றிலும் வினோதமான விஷயங்களிலும், அசாதாரண விஷயங்களிலும் கின்னஸ் சாதனை படைக்கிறார்கள். ஆனால் பாலிவுட்டின் நடிகைகள் உள்பட அழகுப் பெண்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றாக இணைந்து உடற்பயிற்சி செய்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்கள்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், நடிகை கல்கி கோச்சலின், உள்பட 1621 பெண்கள் பங்கேற்றனர். அவர்கள் ஒரு நிமிடம் சிறப்பு உடற்பயிற்சி மேற்கொள்வதில் ஏற்கனவே செய்யப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்கள்.

English Summary : Jacqueline Fernandez, Sakshi Malik and hundreds of women created a Guinness World Record 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...