News
Loading...

பாதி விலையில் மாணவிகளுக்கு ஸ்கூட்டி: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா வழங்கினார்

பாதி விலையில் மாணவிகளுக்கு ஸ்கூட்டி: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா வழங்கினார்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு முதல்வர் ஸ்கூட்டி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஸ்ரீநகர் மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் முறையே 300 மற்றும் 150 ஸ்கூட்டிகளை மாணவிகளுக்கு அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி வழங்கினார்.

இந்த ஸ்கூட்டிகள் மாநில அரசினால் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர் நிகழ்ச்சியில் மெகபூபா பேசியதாவது:-

வன்முறை சம்பவங்களால் முதலில் பாதிக்கப்படுவது ஆண்களை விட பெண்கள் தான். அதேபோல், அமைதிக்கான நடவடிக்கைகளில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பெண்கள் அதிகாரமடைவதற்கு முதலீடுகள் செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கே அதிகாரம் அளித்த மாதிரி ஆகும். 

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நம் மாநில அரசின் நடவடிக்கைகளில் ஸ்கூட்டி வழங்குதலும் ஒன்று ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் 50 சதவீத சலுகை விலையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவிகள் சுதந்திரமாக வெளியில் சென்று வர முடியும்.

இவ்வாறு கூறினார்.

English Summary :  jammu and kashmir Chief Minister handed over keys of scooters to 450 girl students

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.