News
Loading...

ஜெயலலிதா பூரணமாக குணமடைந்துவிட்டார்: அப்போலோ

ஜெயலலிதா பூரணமாக குணமடைந்துவிட்டார்: அப்போலோ

தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார் என அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார். அவருடைய உடல்நிலையை மேலும் தேற்ற சில சிகிச்சைகள் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனநிலை செயல்பாடுகள் தற்போது நன்றாக இருக்கிறது.

புதிதாக ஏதும் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். மருத்துவக் குழு ஒன்று முதல்வரை தீவிரமாக கண்காணித்து வருகிறது" என்றார்.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அப்போலோ மருத்துவர்கள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல் மற்றும் சிங்கப்பூர் பிஸியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.



முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...