News
Loading...

கடவுள் இருக்கான் குமாரு சினிமா விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு சினிமா விமர்சனம்

ஜிவி. பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி, ஆர்ஜே. பாலாஜி, ஊர்வசி, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, கௌரவ தோற்றத்தில் ஜீவா, லொக்காலிட்டி பாடலுக்கு மேண்டி தக்கர் போன்ற பல நடிகர்களின் நடிப்பில் இன்று உலகம் முழுவது வெளியாகியுள்ள திரைப்படம் தான் கடவுள் இருக்கான் குமாரு.

படத்தை பற்றி பார்ப்போம் :-

வழக்கமான தமிழ் சினிமாவின் நாயகனை போல ஜீ.வி.பிரகாஷும் சும்மா சுத்தி திரிந்துக் கொண்டிருக்கின்றார். அப்படி திரியும் போது ஆனந்தியை சந்திக்கின்றார் அவரை பார்த்ததும் காதல் ஆரம்பம். ஆனால் இந்த காதலுக்கு அவரின் தந்தை பாஸ்கர் ஒப்புக்கொள்ளாததால், டீ.வி.சேனலுக்கு பஞ்சாயத்துக்கு செல்கின்றனர், இந்த பஞ்சாயத்து கிட்டத்தட்ட 20நிமிடம் வருகின்றது, அந்த காட்சி முடியும் வரை திரையரங்கமே அதிரும் அளவுக்கு சிரிப்பு இருக்கின்றது.

அந்த பஞ்சாயத்தில் இருவரும் பிரிந்து விடுகின்ரனர். அதன் பின் இரண்டாவது நாயகி நிக்கி கல்ராணியுடன் திருமண நிச்சயம் ஆகின்றது, அதற்காக பார்ட்டி வைக்க, ஆர்.ஜே பாலாஜியுடன் பாண்டிச்சேரி செல்கிறார் ஜி.வி. அப்போது எதிர்பாதவிதமாக வில்லன் பிரகாஷ் ராஜுடன் ஏற்ப்படும் பிரச்சனையால் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தான் மீதி கதை.


ஜீ.வி.பிரகாஷ் :-

படத்திற்கு படம் தன்னை மெருகேற்றும் முயற்சியில் இருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். படத்தில் ஒரு சீனில் நீளமான டயலாக்கை பேசி சும்மா ரசிகர்களை குஷி படுத்திவிடுகின்றார். இது வரை இவர் நடித்த படங்களில் இந்த படத்தில் தான் நடித்திருக்கின்றார் என்று சொல்ல வேண்டும். சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இவர் தரும் கார்ப்பரேசன் விளக்கம் எல்லா மாணவர்களையும் இவர் பக்கம் திருப்பிவிடும், வாழ்த்துக்கள் ஜீ.வி.

கயல் ஆனந்தி, நிக்கி கல்ரானி :-

இவர்கள் நடிப்பை பற்றி சொல்லவா வேண்டும் அப்படி ஒரு நடிப்பு.. ஆனந்தி கவர்ச்சி காட்ட நினைப்பது தெரிகின்றது, இன்னும் கொஞ்சம் காலம் இருக்கனும்னா எல்லாத்தையும் பன்னித்தானே ஆகனும்…. ம்ம்ம்ம்

ஆர்ஜேபாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் இருப்பதால், தன் காமெடி ட்ராக்கை ஹைவேயில் கொண்டு செல்கிறார் ராஜேஷ். போதாக்குறைக்கு எம்எஸ். பாஸ்கர், பிரகாஷ்ராஜ், ஊர்வசி, மனோபாலா ஆகியோரும் தங்கள் பங்கிற்க்கு படத்தில் அசத்துகிறார்கள்.

ராஜேஷ் :-

ஜனங்க ரசிக்கனும், சிரிக்கனும் என்று அடம்பிடித்து காட்சிகளை வைத்திருக்கிறார் ராஜேஷ். இது வரை இல்லாத ஒரு கதை என்று தான் சொல்ல தோனுது ஆனா மிடில வழக்கமான அதே கதை கிளைமாக்சில் அதே கேஸ்ட்டு அபியரன்ஸ் இன்னும் கூட கதையை முதல் பாதியை போலவே கொண்டு சொன்றிருக்கலாம்.

மொத்ததில் ராஜேஷ் தொடந்து இந்த மாதிரியான கதையை எடுத்தாலுமே நாம அதை பார்க்கின்றேம் கடவுள் இருக்கான் குமாரு, ஜீ.வி.படத்தில் நடிப்பதை பார்த்தால் கடவுள் இருக்கான் குமாரு………. டைம் பாஸ் பண்ணலாம் குமாரு…

English Summary : kadavul irukan kumaru cinema review

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...