News
Loading...

அரசு விழா மேடையில் செல்போனில் பலான படம் பார்த்து மாட்டி கொண்ட கர்நாடக கல்வி அமைச்சர்

அரசு விழா மேடையில் செல்போனில்  பலான படம் பார்த்து  மாட்டி  கொண்ட கர்நாடக அமைச்சர்

பெங்களூர்: கர்நாடக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பேரவை கூட்டம் நடைபெறும்போது செல்போனில் ஆபாச படம் பார்த்து மாட்டி கொள்வது வழக்கம். இதுவரை கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் செல்போனில் செக்ஸ் படம் பார்த்து கேமரா கண்ணில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது கர்நாடக கல்வி அமைச்சர் தன்வீர் சேட் செல்போனில் படம் பார்த்து மாட்டி கொண்டார்.

மைசூர் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை கர்நாடகத்தில் அமைந்துள்ள சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த வருடம் முதல் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. 

திப்பு பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது பாஜக. எதிர்ப்பை மீறி நேற்று மாநிலம் முழுக்க பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ரெய்ச்சூர் நகரில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், துவக்க கல்வி அமைச்சர் தன்வீர் சேட், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா மேடையில் இருந்தவாரே, அவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளார். இந்த காட்சி டிவி சேனல் வீடியோகிராபர்களால் சிறை பிடிக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது. இதனால் மாநில அரசியலில் சர்ச்சை வெடித்துள்ளது. உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மற்றும் முதல்வர் சித்தராமையா, இதுதொடர்பாக அமைச்சர் தன்வீர் சேட்டிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

மேலும் கல்வி அமைச்சரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் கிழிகிழியென கிழித்து வருகின்றனர். அதுபோல பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English Summary : Karnataka minister views porn cm seeks explanation

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...