News
Loading...

‘குடிமகன்களுக்கு மது வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மது குடிப்போர் சங்கம் கோரிக்கை!

‘குடிமகன்களுக்கு மது வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மது குடிப்போர் சங்கம் கோரிக்கை!

சென்னை : கருப்பு பணம் ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி அவர்கள் நேற்றிரவு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பை, தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அமோகமாக வரவேற்கிறது.

நேற்றிரவு முதல் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய நோட்டுகள் நாளை முதல் புழக்கத்திற்கு வருகின்றன.

இந்நிலையில், நேற்று பிரதமர் மோடி அறிவித்த பின்னர், பெரும்பாலான அரசு மதுபான கடைகளிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடை ஊழியர்கள் வாங்க மறுத்து விட்டனர். இதனால், மதுபானங்கள் வாங்கச் சென்ற குடிமகன்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சில இடங்களில் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் குடிமகன்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், குடிமகன்களுக்கு எளிய வகையில் மது கிடைக்க வழிவகை செய்யுமாறு அரசிற்கு தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் முன் வைத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியன் கூறுகையில், ”இன்று மதுகுடிக்க டாஸ்மாக்கிற்கு செல்லும் குடிமகன்கள் சில்லறைப் பிரச்சினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் பலர் மது வாங்கக் கூட முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும்.

எனவே, குடிமகன்களின் நிலையைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் மற்றும் பார்களில்  500 மற்றும் 1000 நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு மது வழங்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

English Summary : Need wartime action to liquor drinkers tn liquor drinkers awareness association

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...