News
Loading...

நகைகளுக்கு அடுத்த 'செக்': நகை வாங்க பான் எண் கட்டாயம்

நகைகளுக்கு அடுத்த 'செக்': நகை வாங்க பான் எண் கட்டாயம்

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியான அன்று, நகைக்கடைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர். நவம்பர் 8ம் தேதி விடிய விடிய நகை விற்பனை நடைபெற்றது. இதனிடையே நேற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்தது.

இதனிடையே நேற்று கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேலும் ஒரு புதிய அறிவிப்பை மத்தி‌ய அரசு வெளியிட்டது. இதன்படி நகை வாங்கும்போது பான் எனப்படும் நிரந்தர கணக்கு‌ எண்ணையும் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பான் எண் பெறாமல் ‌நகை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அ‌ரசு எச்சரித்துள்ளது.

English Summary :  Pan number compulsory for gold purchase

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...