News
Loading...

கருப்பு பணத்தை ‘தங்கமாக’மாற்ற மக்கள் ஆர்வம்... தங்கம் விலை உயரும் அபாயம்!

ரூ.500, ரூ. 1000 நோட்டுகளை ‘தங்கமாக’மாற்ற மக்கள் ஆர்வம்... தங்கம் விலை உயரும் அபாயம்!

ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், தங்களிடம் உள்ள பணத்தை தங்கமாக மாற்ற மக்கள் முயற்சித்து வருகின்றனர். இதனால் சவரனுக்கு ரூ 2000 முதல் 3000 வரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என அதிரடியாக மத்திய அரசு அதிகரித்தது. இந்தப் பழைய நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுக்களைப் பெற கால அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆனபோதும், மத்திய அரசின் இந்த அறிவிப்பால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நகை வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தியர்கள் தங்கம் வாங்குவதை முதலீடாகவே கருதுகின்றனர். இதனால் இங்கு தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால், மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிக பாதுகாப்பாக உணருவார்கள். இதனால் தங்கள் சேமிப்பை தங்கமாக வைத்திருக்க மக்கள் விரும்புவார்கள் என்பதால் தங்க வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : People started converting rupees into gold

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...