News
Loading...

நாட்டு மக்களை முழுமையாக ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாற்ற ஜெட்லி யோசனை

நாட்டு மக்களை முழுமையாக ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாற்ற ஜெட்லி யோசனை

நாட்டில் 40 கோடி மின்னணு கார்டுகள் பயன்படுத்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி உயரதிகாரிகளுடன் டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுமக்களை மின்னணு வங்கிச் சேவையை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்க எந்தவகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெட்லி, மக்களே டெபிட் கார்டு உள்ளிட்ட மின்னணு சேவைகளைப் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கி மாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது தேவையற்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் 80 கோடி டெபிட், கிரெடிட் கார்டுகள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 40 கோடி கார்டுகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பொதுமக்கள் பணத்தை ரொக்கமாக அதிகம் பயன்படுத்தாமல், மின்னணு வங்கி சேவைகள் மூலம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும். இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொளளும் என்றும் ஜெட்லி கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...