News
Loading...

சபரிமலை பம்பை நதியில் பக்தர்கள் சோப்பு போட்டு குளித்தால் 6 ஆண்டு சிறை தண்டனை

சபரிமலை பம்பை நதியில் பக்தர்கள் சோப்பு போட்டு குளித்தால் 6 ஆண்டு சிறை தண்டனை

பரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது.

இதனால் நாளுக்கு நாள் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகு தான் அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் புல்மேடு பாதையும் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரவனை, அப்பம் பிரசாதம் வாங்கி செல்வார்கள். மண்டல பூஜையையொட்டி முன் கூட்டியே 4 லட்சம் டின் அரவனை, 2 லட்சம் பாக்கெட் அப்பம் தயார் நிலையில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

நவீன எந்திரங்கள் மூலமும் அதிகளவு பிரசாதம் தினமும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. இந்த நிலையில் கைவசம் இருந்த 4 லட்சம் டின் அரவனை, 2 லட்சம் டின் அப்பம் ஆகியவை விற்று தீர்ந்து விட்டது. இதனால் இந்த பிரசாதங்கள் தயாரிக்கும் பணி இடைவிடாமல் நடந்து வருகிறது. இதன் காரணமாக பக்தர்களுக்கு பிரசாதம் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.

பக்தர்கள் கூட்டம் காரணமாக கோவில் நடை கூடுதல் நேரம் திறக்கப்பட்டிருந்தது. இரவு 11.45 மணிக்குதான் கோவில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள புண்ணிய நதியான பம்பையில் நீராடி விட்டுதான் செல்வார்கள். பம்பை நதி மாசுப்படுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நதியில் பக்தர்கள் ஆடைகளை கலைந்து செல்லக்கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் தேய்த்து குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மீறி பம்பை நதியில் சோப்பு பயன்படுத்தி குளித்தால் 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று பத்தனம்திட்டா கலெக்டர் கிரிஜா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

English Summary : pilgrims at Sabarimala Pamba river to bathe with soap sentence

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...