News
Loading...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் Online வாக்குப்பதிவு

இந்திய வரலாற்றில் முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் Online வாக்குப்பதிவு

இந்திய வரலாற்றில் முதன்முறையாக நெல்லித் தோப்பு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிக்க ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 8 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு 26 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது. வாக்குபதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். 8 மணி நிலவரப்படி 11 சதவிகித வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில் தபால் ஓட்டுக்களுக்கு பதிலாக ஆன்லைன் வாக்குகள் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த ராணுவத்தினர், தேர்தல் பணியில் உள்ள அரசு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை வாக்களித்தார். நெல்லித்தோப்பு தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக நாராயணசாமி கூறியுள்ளார்.

English Summary : Pondicherry nellithoppu introducing online polling system

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...