News
Loading...

ராஜ்கோட் டெஸ்ட்:முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 311-4: ஜோ ரூட் அபார சதம்

ராஜ்கோட் டெஸ்ட்:முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 311-4: ஜோ ரூட் அபார சதம்

ராஜ்கோட் : இந்தியா–இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் குக் (21)- ஹமீது (31) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ரூட் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

பின்னர் வந்த டக்கெட் 13 ரன்னில் வெளியேற மொயின் அலி களம் இறங்கினார். இவர் அபாரமாக விளையாடி ரன்கள் குவித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. மொயின் அலி 99 ரன்னிலும், ஸ்டோக்ஸ் 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து இன்று தனது நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இந்திய பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

English Summary : Rajkot test day 1 stumps england 311-4

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...