News
Loading...

ரூ.20 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்த வங்கி

ரூ.20 ஆயிரத்துக்கு 10 ரூபாய் நாணயங்கள் கொடுத்த வங்கி

வங்கியில் பணம் எடுக்கச்சென்ற ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இம்தியாஸ் ஆலம் என்பவர், வங்கிக்குச் சென்று தனது கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். ஆனால், போதிய அளவு ரூபாய் நோட்டுகள் இல்லை என கூறி அவருக்கு 10 ரூபாய் நாணயங்களாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் வரிசையில் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க நாணயங்களை ஏற்றுக்கொண்டதாக இம்தியாஸ் கூறினார். ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இல்லை என ரிசர்வ் வங்கி கூறிவரும் சூழலில், 20 ஆயிரம் ரூபாய்க்கு 10 ரூபாய் நாணயங்கள் வழங்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...