News
Loading...

SHARE MARKET மோசடி..!

SHARE MARKET மோசடி..!

*WRITE OFF :*
இதுவரை தள்ளுபடி என்றால் என்ன என தெரிந்த அனைவருக்கும் WRITE OFF என்றால் என்ன என புரிய வைக்க வேண்டிய கால கட்டம் இது. ஏனெனில் ஆளும் அரசு ஒட்டு மொத்த இந்தியனையும் கூமுட்டைகளாக நினைத்து வெளியிடும் அறிக்கை தான் WRITE OFF.

*வங்கியின் வேலை என்ன ?*

தெருவுக்கு 4 என பல வித பெயர்களில் ஏராளமான வங்கிகள் இருந்தாலும் அதன் முக்கிய பணி வட்டிக்கு கடன் கொடுப்பது ஆகும். ஏதாவது வங்கிக்கு சென்று உங்களுடைய கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கும் , வங்கியில் வட்டிக்கு கடனாக பெறுபவருக்கும் கிடைக்கும் மரியாதையிலேயே தெரியும் கடன் பெறுபவருக்கு மரியாதையுடன் கூடிய பரிசுப்பொருட்கள் உட்பட அனைத்து வித சலுகைகள் வழங்கப்படும். LOAN CARD கடன்கார அட்டை என்று சொல்லப்பட வேண்டிய அட்டை கூட CREDIT CARD நம்பிக்கையாளரின் அட்டை என்று கூறப்படுகிறதென்றால் வட்டிக்கு கடன் கொடுப்பதை வங்கிகள் எவ்வாறு ஊக்கப்படுத்துகிறது என்பதை அறியலாம்.

இப்படி வலிய வந்து கொடுக்கப்படும் கடன்களில் வாகன கடன் , வீட்டு கடன் , கல்வி கடன் , கிரெடிட் கார்டு கடன் என பலவகைகள் அடங்கும்.
அதைப்போலவே வெளிநாடுகளோடு தொடர்புடைய வியாபாரத்திற்கு என பெரிய பெரிய நிறுவனங்கள் கடன் பெறும். சாதாரண தனி மனிதனுக்கே வலிய வந்து ஊக்கப்பரிசோடு கடன் கொடுக்கும் வங்கிகள் மல்டி நேசனல் கம்பெனியை விட்டு விடுமா என்ன ? நான் நீ என அடித்துக்கொண்டு அம்பானி , அதானி, மல்லையா போன்ற நிறுவனங்களுக்கு வாரி இறைக்கும் அதற்கு தகுந்தவாறு வங்கியின் மேலாளர் முதல் நிதியமைச்சகம் வரை அந்த கடன் பெற்ற நிறுவனம் விசுவாசமாக நடந்து கொள்ளும்.

*ஏன் WRITE OFF செய்ய வேண்டும் ?*

வங்கியில் கடன் பெற்ற நிறுவனம் சில காலங்கள் வட்டி கட்டும் ( அசல் என்பது எப்போதும் கட்டப்படாது, அசலை அடைக்க வேண்டும் என அந்த நிறுவனமே நினைத்தாலும் கடன் கொடுத்த வங்கிகள் அதை ஏற்றுக்கொள்ளாது), பிறகு கணக்கிலேயே எட்ட முடியாத அளவுக்கு பொய்யான லாபத்தை காட்டும் அதற்கு ஏராளமான வரியை அரசுக்கு செலுத்தும். ஓராண்டு ஈராண்டுகள் சென்ற பின் அந்த நிறுவனத்தை பற்றி வங்கியும் அரசும் நற்சான்றிதழ் வழங்கும், இந்த சந்தர்ப்பம் ஒன்றே அந்த நிறுவனம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நாள். தனது முழு நிறுவனத்தையும் SHARE MARKET ல் பங்கு சேர பங்குதாரர்களை அழைப்பார்கள். 

1,000 கோடியில் நிறுவப்பட்ட அந்த நிறுவனத்தின் பங்குகள் 50,000 கோடி அளவுக்கு விற்பனை ஆகி இருக்கும்.
இதன் பிறகு ஏற்கனவே காட்டப்பட்ட பொய்யான லாபக்கணக்கில் மாற்றம் செய்து நஷ்டக்கணக்கு வெளிவரும் சில காலங்கள் கழித்து முழுவதுமாக நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என நிறுவனத்தை மூடி விடுவார்கள்.

1,000 கோடி கடனை கொடுத்து அந்த பொய்யான லாபக்கணக்கை வைத்து நற்சான்றிதழும் கொடுத்து பல ஆயிரம் கோடிக்கு பங்கு சேர்க்கும் வரை அமைதியாக இருந்த அரசு அந்த நிறுவனத்தை முடக்கும். எந்த பங்குதாரரும் தனது பங்கை கேட்டு முற்றுகையிட முடியாதவாறு அரசு பாதுகாப்பு கொடுக்கும்.

சில காலங்கள் கழித்து வராக்கடனில் இருக்கும் அந்த நிறுவன கணக்குகளை முடித்து விட வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படும்போது WRITE OFF என்று கூறி கணக்கை மூடி விடுவார்கள். இல்லையெனில் வராக்கடன் எண்ணிக்கை அதிகமாகவும் வங்கியின் இருப்பு நிலை அதாள பாதாளத்திலும் இருக்கும். அதாவது ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவும் என நம்மை நம்ப வைத்து விடுவார்கள்.

WRITE OFF கடன் திரும்ப வருமா ?

வரவே வராது , ஏனெனில் மல்லையா போன்ற எந்த தொழிலதிபரும் தனது பெயரில் அந்த கடன் தொகையை வைத்துக்கொள்வதில்லை மாறாக அனைத்துமே பங்குதாரர்கள் பெயருக்கு மாற்றப்படிருக்கும். 1,000 கோடி முதலீடு என்ற பொய்யான கணக்கில் தொடங்கப்பட்ட நிறுவனம் 50,000 கோடி அளவுக்கு share சேர்க்கப்பட்டு அனைத்துமே பங்குதாரர்களின் தலையில் சுமத்தப்படிருக்கும்.

தனி நபரோ , மாணவனோ வங்கியில் கடன் பெற்றால் அந்த தொகையில் தனது பெயரில் ஏதோ ஒன்று வாங்கியிருப்பான் எப்போது அந்த கடனை கட்ட முடியாமல் போகிறதோ அப்போது அவன் பெயரில் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். ஆனால் அம்பானி , அதானி , மல்லையா போன்ற நிறுவனங்கள் ஏதோ மக்களுக்கு சேவை செய்வது போல நிறுவனங்களை மாற்றி வைத்திருப்பார்கள் அதனால் மக்களுக்கு சேவை செய்யவே தொடங்கப்பட்ட நிறுவனத்தை முடக்க முடியாது என அரசே அதை ஏற்று WRITE OFF செய்து விடுவார்கள். இதற்கு உதாரணம் SATYAM RAJU என்பவர் 7,000 கோடி மோசடி செய்திருந்த போதும் அவரிடம் 10 ரூபாய் கூட வசூலிக்க முடியவில்லை மேலும் அவருடைய நிறுவனத்தை கூட முடக்க முடியவில்லை ஏனெனில் மக்களுக்கு சேவை சஎய்யஉம், ஆம்புலன்ஸ் ஆக அது ஓடுகிறது. MAYTAS திருப்பி போட்டால் SATYAM. ஆம் MAYTAS என்ற நிறுவனமே 108 ஆம்புலன்ஸ்.

- Alim Hussain.J

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.