News
Loading...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் : ரூ.2.18 கோடி மதிப்புள்ள பணம் - பொருட்கள் பறிமுதல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் :  ரூ.2.18 கோடி மதிப்புள்ள பணம்-பொருட்கள் பறிமுதல்

மதுரை: அக்டோபர் 18 முதல் நவம்பர் 7ம் தேதி வரை ரூ.2.18 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மதுரை ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். 

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் அரசியல் கட்சியினர் எந்தெந்த வழிமுறைகளை தேர்ந்தெடுந்தாலும் அந்த வழி களை கண்டுபிடித்து தடுக்க பறக்கும் படையினர், கிராமம், கிராமமாக அவர்களை பின் தொடர்ந்து வருகின்றனர். பரிசுப்பொருட்களுக்காக மொத்தமாக பேன்சி ஸ்டோர், பர்னிச்சர் கடைகள், ஜவுளிக் கடை களில் கொள்முதல் செய்வோர் கண்காணிக்கப்படுகின்றனர். குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி மட்டுமில்லாது இந்த தொகுதிக்கு பக்கத்து தொகுதிகள், மதுரை நகரப்பகுதி திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்த நிறுவனங்கள், கடைகள் மற்றும் அவர்கள் வீடுகளும் கண்காணிக்கப்படுகிறது. அக்டோபர் 18 முதல் நவம்பர் 7ம் தேதி வரை ரூ.2.18 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று மதுரை ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

English Summary : Thiruparankundram poll ec officials seize rs 2.18 crore

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...