News
Loading...

500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்...!

500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்...!

செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசு வழங்கிய கெடு இன்றோடு முடிகிறது.

அதே நேரம் இந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய இன்னும் ஒரு மாதம் காலக்கெடு உள்ளது.செல்லாததாக அறிவிக்கப்பட்ட 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்வதற்கு முதலில் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இந்த உச்ச வரம்பு ரூ.4,500 ஆக உயர்த்தப்பட்டது. திடீரென்று அந்த தொகை ரூ.2,000 ஆக குறைக்கப்பட்டது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு ஒருவர் மீண்டும், மீண்டும் வருவதைத் தடுக்க விரலில் அடையாள 'மை' வைக்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தநிலையில் வங்கிகள், தபால் நிலையங்களில் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்காக மத்திய அரசு அறிவித்திருந்த காலக்கெடு இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

அதே சமயத்தில் தங்கள் கைவசம் உள்ள செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி வரை பொதுமக்கள் செலுத்தலாம். வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு தொடங்கி, செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தலாம்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். இன்று செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுவதற்கு கடைசி நாள் என்பதால் வங்கிகளில் கூட்டம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary : Today is the last date exchange old currency notes

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...