News
Loading...

நவ.14 வரை சுங்க கட்டணம் ரத்து... நிதின் கட்கரி

நவ.14 வரை சுங்க கட்டணம் ரத்து... நிதின் கட்கரி

நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் மேலும் மூன்று நாட்களுக்கு சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

கருப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் ரூ. 500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியாமால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதனால் இன்று இரவு வரை சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் சுங்க கட்டண அவகாசத்தை வரும் 14 ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வாகனப் போக்குவரத்து சுமூகமாக நடைபெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்கரி கூறியுள்ளார்.

English Summary : Toll charges canceled until Nov. 14…Nitin Gadkari

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...