News
Loading...

68 வருடங்களுக்கு பிறகு இன்று தோன்றும் சூப்பர் நிலா.... பார்க்க மறந்துடாதீங்க!!

68 வருடங்களுக்கு பிறகு இன்று தோன்றும் சூப்பர் நிலா.... பார்க்க மறந்துடாதீங்க!!

பூமியைச் சுற்றி வரும் நிலா சுமார் 70 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூமிக்கு மிக அருகில் தெரியும். 

வழக்கத்தைவிட நிலா சுமார் 14 சதவீதம் பெரிதாக நமது கண்களுக்கு தெரியும். பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. 'சூப்பர் நிலவு' நிகழ்வு ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், அதாவது நிலவை அருகில் இருந்து பார்ப்பது போல தோன்றும். 

வழக்கமான ஒளியை விட 30 சதவீதம் கூடுதலான ஒளியுடன் இன்று இந்த நிலவு தோன்றும் என்பதால் இன்றைய இரவு மிகவும் வெளிச்சமாக இருக்கும். கடந்த 1948ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் தோன்றியது. அதற்கு பிறகு 68 வருடங்களுக்கு பிறகு இன்று இந்த பெரிய நிலா தோன்றுகிறது. வானம் தெளிவாக இருந்தால் இதை சென்னை உட்பட தமிழகத்தின் எல்லா இடங்களிலில் இருந்தும் மக்கள் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். அதிக ஒளியுடன் இந்த நிலா தெரியும் என்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தோன்றும். இன்று பார்க்க முடியாதவர்கள் கூட, அடுத்த மாதம் 14ம் தேதி மீண்டும் பார்த்து ரசிக்கலாம். அல்லது, அடுத்த ஆண்டு டிசம்பரில் பார்க்கலாம்.

English Summary : Tonight is record breaking supermoon the biggest after 68 years

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...