News
Loading...

ஒபாமாவை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது?

ஒபாமாவை ஏன் பிடிக்கிறது?

நார்த் கேரலினா மாநிலத்தில் நேற்று தேர்தல் பேரணி. ஜனநாயக கட்சி ஏற்பாடு. ஹில்லரி கிளின்டனை ஆதரிச்சு அதிபர் ஒபாமா பேசுகிறார்.

திடீர்னு ஒரு ஆள் எழுந்திரிச்சு நிக்கிறார். கையில ஒரு போஸ்டர். அதுல குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரிக்கும் வாசகம். 'ட்ரம்ப், அமெரிக்காவ மறுபடி நம்பர் ஒன் ஆக்கு!'.

கூட்டம் பூரா கொதிச்சுப் போச்சு. உக்காரு, பேமானி அது இதுன்னு கூச்சல்.

ஒபாமாவை ஏன் பிடிக்கிறது?

ஒபாமா அமைதி அமைதின்னு கத்தியும் கூட்டம் கண்டுக்கல. கோரசா கோஷம். போங்கடானு பேச்சை அதோட முடிச்சுகிட்டு போயிருப்பாங்க மத்த தலைவர்கள். ஒபாமா அத செய்யல.

அமைதி அமைதி அமைதி..! ன்னு கூட்டத்தோட கூச்சலுக்கு மேல சவுண்ட் விட்டார். திரும்பத் திரும்ப. விடியோ பாத்தா தெரியும். 50 வாட்டி கத்திருப்பார்.

ஒரு வழியா கூச்சல் அடங்கினதும் ஒபாமா சொன்னார்:
"இதாம்பா... இப்படித்தான் நீங்க எல்லாரும் ஃபோகஸ் இழ்ந்துட்றீங்க. ஃபோகஸ் இழந்தா என்ன ஆகும்? நஷ்டம் ஆகும்.

வர வர என்ன மேட்டருக்குதான் டென்ஷன் ஆறதுன்னே நம்ம ஜனங்களுக்கு தெரியல. அல்ப மேட்டர்லாம் பெருசா டிபேட்டுக்கு வருது. வேணாம்.

அமைதியா இருங்க. ஏன்னா, ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல், அமெரிக்கா கருத்து சுதந்திரம் உள்ள நாடு. யாரும் எதையும் பேசலாம். அதுக்கு நம்ம எல்லாருக்கும் உரிமை இருக்கு. அந்த ஆளுக்கும் இருக்கு. அவர் என்ன செஞ்சார்? ஒண்ணுமே செய்யல. சும்மா எழுந்து நிக்கிறார், அவ்ளோதான். அதுக்கு ஏன் கத்துறீங்க?

ரெண்டாவது, அவர் மிலிட்டரி யூனிஃபார்ம் போட்ருக்கார். முன்னாள் ராணுவ வீரரா இருக்கலாம். நாட்டுக்காக சேவை செஞ்சவங்களை நாம மதிக்க வேணாமா?

மூணாவது, அவர் வயாசானவர். பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க வேணாமா?

நாலாவது.... இந்த மாதிரி சவுண்ட் விட்றதுனால ஒரு பிரயோசனம் கிடையாது. பூத்துக்கு போய் ஓட்டு போடுங்க மக்களே. அதுதான் எல்லாத்தையும் விட முக்கியம்..

கமான், ரிலாக்ஸ்!"

ஒபாமா இப்படி பேசி முடிச்சதும் கூட்டம் அமைதியாகி அவரோட சேர்ந்து சிரிச்சுது.

இருங்க. கதை முடியல.

"ஒபாமா லூசு. மறை கழண்டுருச்சு. கூட்டத்துல அமைதியா ஒருத்தர் எழுந்து என் போஸ்டரை காட்டினதும் காண்டாகி காச் மூச்னு அவர பாத்து கூச்சல் போட்ருக்கார் ஒபாமா.." என்று பேட்டி கொடுக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

இந்த ட்ரம்ப் போன மாசம் என்ன சொல்லுச்சு, ஞாபகம் இருக்கா?

"நம்ம (குடியரசு) பேரணில எவனாச்சும் டெமக்ராட் நுழைஞ்சு பேனர் போச்டர் காட்டினா சும்மா விடாதீங்க. பொரட்டி எடுக்கணும். அவன ஸ்டிரச்சர்லதான் தூக்கிட்டு போகணும், பாத்துக்குங்க..," என்று தனது ஆதரவாளர்களுக்கு அட்வைஸ் செஞ்சவர்தான் ட்ரம்ப்!

English Summary : Why all love Obama

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.