News
Loading...

டில்லியில் மோசமான அளவுக்கு காற்று மாசுபாடு..பட்டாசு விற்க தடை..சுப்ரீம் கோர்ட்

டில்லியில் மோசமான அளவுக்கு காற்று மாசுபாடு....பட்டாசு விற்க தடை..சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: டில்லியில் மோசமான அளவுக்கு காற்று மாசுபாடு அடைந்துள்ளதால், பட்டாசு விற்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அவதி:
டில்லியில் தீபாவளி முடிந்த பிறகு, காற்றுமாசுபாடு மோசமாக உள்ளது. மக்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்களது வீடுகளை விட்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தான் வெளியேற வேண்டியுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுத்தும் பலனளிக்கவில்லை. கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை. 

ரத்து:
இந்நிலையில், இது தொடர்பான வழக்கை ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டில்லி மற்றும் என்சிஆர் சாலைகளில் பட்டாசு விற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள லைசென்ஸ்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...