News
Loading...

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யோகா கட்டாய பாடம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யோகா கட்டாய பாடம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரும், பாஜ செய்தி தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், ‘‘நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யோகா பாடத்தை கட்டாயமாக்க வேண்டும், யோகா மற்றும் ஆரோக்கியக் கல்வி குறித்த நிரந்தரமான பாட புத்தகங்கள் வழங்குவதற்கு, மனிதவளத்துறை, என்சிஈஆர்டி, என்சிடிஇ மற்றும் சிபிஎஸ்இ உள்ளிட்டவற்றுக்கு உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி எம்.பி.லோகூர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் “பிரச்னையின் தன்மையை கருத்தில் கொண்டு, யோகா பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து 3 மாதங்களுக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். அதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...