News
Loading...

சென்னைக்கு விரைவில்.. பறக்கும் (ஏர்) ஆம்புலன்ஸ் அறிமுகம்..!

சென்னைக்கு விரைவில்.. பறக்கும் (ஏர்) ஆம்புலன்ஸ் அறிமுகம்..!

விபத்து மற்றும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த 30 நிமிடம் என்பது கோல்டன் நேரமாக கருதப்படும்.

அப்படிப்பட்ட நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால் மறுபிறவி கிடைக்கும், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.

10 நிமிடம் முன்னதாக கொண்டு வந்திருந்தால் எப்படியும் காப்பாறியிருக்கலாம் என டாக்டர்கள் கை விரிப்பதை நாம் பார்த்துள்ளோம்.

வளர்ந்து வரும் நாட்டில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. நகர் பகுதியில் வீட்டிற்கு நான்கு கார்கள் வைத்துள்ளனர்.

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களில் அனைத்து சாலைகளும் எந்த நேரமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இதில் நோயாளிகளை ஏற்றி கொண்டு அவசரமாக மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொண்டு தவிப்பதை நாம் தினமும் பார்க்கிறோம். அப்படி தாமதாக சென்று உயிர் இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த பிரச்சனையை சமாளிக்க வந்து விட்டது ஏர் ஆம்புலன்ஸ் (108) முதலாவதாக பெங்களுவில் ஹெச்.ஏ.எல்., விமான தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை இன்று (16ம் தேதி) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக பெங்களூருவிலுள்ள முக்கியமான மருத்துவமனைகளின் மொட்டை மாடிகளில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கப்படுகிறது.

பெங்களூரு நகர் முழுவதும் காலியாகவுள்ள மைதானங்களை கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் போன் செய்த உடன், அந்த இடத்தின் அருகிலுள்ள மைதானத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

இந்த திட்டம் நல்ல பலனை தரும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.இதை போன்று சென்னை உட்பட முக்கிய நகரங்களில் விரைவில் கொண்டு வரப்படும் என ஹெச்.ஏ.எல்.,விமான சேவை நிறுவனம் தெரிவித்தது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்