News
Loading...

4 மணி நேரத்திற்கு ஒருபெண் பலாத்காரம்... அதிர்ச்சி தகவல்..!!

4 மணி நேரத்திற்கு ஒருபெண் பலாத்காரம்... அதிர்ச்சி தகவல்..!!

புதுடெல்லியில் 2016-ம் ஆண்டு 4 மணி நேரத்திற்கு ஒருபெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்றும் ஒவ்வொரு நாளும் 21 கார்கள் திருடப்பட்டு உள்ளது என்றும் அம்மாநில போலீஸ் தரவுகள் தெரிவித்து உள்ளன.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்தினை அடுத்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. மத்திய அரசை புதிய சட்டத்தையும் கொண்டுவரச்செய்தது இப்போராட்டம். என்னதான் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இதுவரையில் பெண்களுக்கு எதினான பாலியல் வன்கொடுமைகளில் இதுவரையில் காட்சி மாறவில்லை. தினமும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவமானது செய்திகளாகி வருகிறது. இதில் தேதசத்தின் தலைநகரின் நிலையானது மிகவும் மோசமாக உள்ளது.

இப்போது அம்மாநில போலீஸ் தரவுகளே, மாநிலத்தில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார் என்பதை தெரிவித்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டைவிட கிரிமினல் குற்றமானது குறைந்து உள்ளது. 

டெல்லி போலீஸ் கடைசியாக வெளியிட்ட ஆண்டு கிரைம் தரவுகளின் படி, பாலியல் தொந்தரவு (5,328-ல் இருந்து 4,005 ஆக குறைந்து உள்ளது) மற்றும் கொள்ளை சம்பவங்கள்  (7,141-ல் இருந்து 4,538 ஆக குறைவு) பெருமளவு குறைந்து உள்ளது என்பதை காட்டுகிறது. 

இருப்பினும் 2016-ம் ஆண்டு டெல்லியில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்று தெரியவந்து உள்ளது. கடந்த வருடம் மட்டும் 2,069 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியிருந்தது. இவ்வாண்டு 2,029 ஆக உள்ளது. இதில் 1,744 வழக்குகளை போலீஸ் தீர்த்து வைத்து உள்ளது.

 இந்திய தண்டனைச் சட்டத்தின்படி டெல்லி முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ள எப்.ஐ.ஆர். பதிவானது 8.88 சதவிதம் உயர்ந்து உள்ளது. கடந்தவருடம் 1.81 லட்சமாக இருந்தது, 1.97 லட்சமாக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே கொள்ளை வழக்குகள் பதிவானது 35.45 சதவிதம் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதும் இதற்கு ஒருகாரணமாக இருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர். நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 9-ம் தேதி வரையில் 315 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 561 ஆக இருந்தது. டெல்லியில் கொலை குற்றமும் 530-ல் இருந்து 490 ஆக குறைந்து உள்ளது. 

டெல்லியில் ஒரு குற்றத்தை குறைக்க டெல்லி போலீஸ் தவறிவிட்டது. கடந்த வருடத்தை ஒப்பீடுகையில் இவ்வருடம் 5,250 கார்கள் அதிகமாக திருட்டு போய் உள்ளது, மொத்தம் 36,137 கார்கள் திருடப்பட்டு உள்ளது. இந்த திருட்டை எதிர்க்கொள்ள அண்டைய மாநிலங்களான அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீசுடன் தொடர்பில் உள்ளனர். டெல்லியின் பிரசாந்த் விகார் பகுதியானது கார் திருட்டில் முதன்மையிடம் பெற்று உள்ளது. அங்கு மட்டும் 920 கார்கள் திருடப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பஜான்புராவில் 630 கார்கள் திருடப்பட்டு உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்