News
Loading...

சசிகலாவை எதிர்த்து அ.தி.மு.கவில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் விலகல்

சசிகலாவை எதிர்த்து அ.தி.மு.கவில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் விலகல்

12 ஆண்டுகளாக அ.தி.மு.கவில் இருந்த நடிகர் ஆனந்தராஜ் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

நடிகர் ஆனந்தராஜ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக தலைமைக்கு முறைப்படி கடிதம் அனுப்பிவிட்டேன். இப்போதும் மக்கள் முதல்வர்  ஜெயலலிதா தான்.  செங்கோட்டையன் , பொன்னையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. ஒருவரை உயர்த்துவதன் மூலம் ஜெயலலிதாவை இழிவுபடுத்த வேண்டாம். நாளை நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு எனக்கு அழைப்பில்லை. ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் அவருடன் யாரையும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். நிர்பந்தத்திற்காக சிலரை ஆதரிக்கிறார்கள். சுய லாபத்திற்காக சில அமைச்சர்கள் ஆதரிக்கிறார்கள.

மக்கள்தான் யார் தலைவர் என சொல்லவேண்டும். தொண்டர்கள் விரும்புகிற தலைமை வரவேண்டும். நாளை பொதுக்குழுவில் யார்  பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டாலும் வாழ்த்துக்கள்

 வாய்ப்பு கிடைத்தால் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திப்பேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்