News
Loading...

இன்று அனுமன் ஜெயந்தி: வாழ்வில் வளம் பெற அனுமனை வணங்குவோம்!

இன்று அனுமன் ஜெயந்தி: வாழ்வில் வளம் பெற அனுமனை வணங்குவோம்!

னுமன் புகழ் பாடும் துளசிதாசரின் அனுமன் சாலீஸாவில் உள்ள சில ஸ்தோத்திரங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. அனுமன் ஜெயந்தியான இன்று பக்தியுடன் படித்து பலன் பெறுங்கள். 

* வாயு மைந்தனான ஆஞ்சநேயனே! எனக்கு அறிவு, உடல்வலிமை, உண்மை ஞானம் ஆகியவற்றைத் தந்தருள வேண்டும். துன்பத்தில் இருந்தும், தவறுகளில் இருந்தும் என்னை விடுவித்து அருள வேண்டும். உன்னை எப்போதும் சரணடைகிறேன். 

* வானரங்களின் தலைவனே! நற்குணங்களின் இருப்பிடமே! கடல் போல பரந்த அறிவு கொண்டவனே! ஆற்றலின் உறைவிடமே! கேசரியின் மகனாக வந்தவனே! உனக்கு வெற்றி உண்டாகட்டும். 

* ராம துாதனே! அஞ்சனை மைந்தனே! வாயு புத்திரனே! தீயசிந்தனையைப் போக்குபவனே! நற்சிந்தனையின் நண்பனே! பொன்னிறம் கொண்டவனே! ஒளிவீசும் குண்டலங்களை அணிந்தவனே! ராமசேவைக்காக காத்திருப்பவனே! அருள்புரிவாயாக. 

* சீதாராமரை மனதில் தாங்கியிருப்பவனே! இலங்கையைக் கொளுத்தியவனே! ராமனின் கட்டளையை வெற்றியுடன் முடித்தவனே! ராமநாமத்தில் பிரியமானவனே! சஞ்சீவி மலையைத் துாக்கி வந்தவனே! ஆதிசேஷனாலும் அளக்க முடியாத பெரும் புகழ் படைத்தவனே! உமது அருள் கிடைத்தால் அரிய செயலும் எளிதில் நிறைவேறும். 

* சுக்ரீவனுக்கு உதவி செய்தவனே! சூரியனைப் பழம் எனக் கருதி விழுங்கியவனே! ராமராஜ்யத்தின் காவலனே! சரணடைந்தவருக்கு இன்ப வாழ்வு அளிப்பவனே! உன் பாதுகாப்பு இருக்கும் போது நான் எதற்கு பயப்பட வேண்டும்? 

* மகாவீரனே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! ஆற்றல் மிக்க உன் திருநாமத்தை ஜெபித்தால் உடல்நலம் கிடைக்கும். எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உன்னைத் தியானித்தால் வாழ்வில் இன்பம் சேரும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்