News
Loading...

அருணாச்சல பிரதேசத்தில் அதிரடி : ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.

அருணாச்சல பிரதேசத்தில் அதிரடி : ஆட்சியமைக்கிறது பா.ஜ.க.
முதலமைச்சர் பேமா காண்டு

ருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பேமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. 

மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் 43 எம்.எல்.ஏ.க்களுடன் அருணாச்சல் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. இந்நிலையில், பேமா காண்டு தலைமையிலான அரசு, பா.ஜ.க.வுக்கு சாதமாக நடந்துகொள்வதாகவும் பா.ஜ.க.வில் பேமா காண்டு தனது கட்சியை இணைக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததால் அவரையும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் நீக்கி கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. 

ஆனால், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பெற்ற பேமா காண்டுவோ, அதிரடியாக களமிறங்கி கட்சி தலைமையை கலங்கடித்து விட்டார். 43 எம்.எல்.ஏ.க்களில் பேமா காண்டு உள்ளிட்ட 33 பேர் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியில் தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளதால் ஆட்சியமைக்கும் தகுதியை இழந்துள்ளது. 

எனவே, புதிதாக இணைந்த 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. புதிய ஆட்சிமைக்க உரிமை கோருகிறது. இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் முன்பு நிறுத்தினார். மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்ததை அவரும் ஏற்றுக்கொண்டார். 

60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 47 ஆக உயர்ந்துள்ளது. அருணாச்சல் மக்கள் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 3 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்