News
Loading...

இனி 20 ரூபாய் செலுத்தி கூகுள் பிளேவில் புதிய படங்களை பார்க்கலாம்

இனி 20 ரூபாய் செலுத்தி கூகுள் பிளேவில் புதிய படங்களை பார்க்கலாம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூகுள் பிளேவின் மூவிஸ் சேவைகளுக்கு புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூகுள் பிளே மூவிஸ் வழங்கும் திரைப்படங்களை 20 ரூபாய் செலுத்தி வாடகைக்கு பெற முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக உலக சினிமாக்கள் வாடகைக்கு கிடைக்கின்றன.

இந்த சலுகை ஜனவரி 23, 2017 வரை அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு மட்டுமில்லாமல் அடுத்த வருடம் வரை இந்த சலுகையை பயன்படுத்த முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கூகுள் பிளே சேவையில் இந்த ப்ரோமோ கோடினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். 

உங்களின் நண்பர் வழங்கும் பட்சத்தில், அவர்களின் கூகுள் பிளே ப்ரோமோ கோடு பயன்படுத்தியும் இந்த சலுகையை பெற முடியும். இந்த சலுகையில் பல்வேறு திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தை தேர்வு செய்யலாம்.  

கூகுள் பிளே மூவிஸ் சேவையின் கீழ் திரைப்படங்களுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வந்த நிலையில் வாடகை முறையில் கிடைக்கும் புதிய சலுகையின் மூலம் திரைப்படங்களை குறைந்த கட்டணம் செலுத்தி பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சேவை கூகுள் பிளே ஸ்டோரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பினை வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...