News
Loading...

ஸ்கெட்ச் - அமலநாதன்! - நெட்வொர்க் - 4

‘ஸ்கெட்ச்’ அமலநாதன்! - நெட்வொர்க் - 4

மலநாதனிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, “சார்.. உங்களுக்கு எங்கள் டிபார்ட்மென்ட்டிலேயே இவ்வளவு அதிகாரிகளைத் தெரியுமா?” என்று ஆச்சர்யப்பட்டு இன்கம்டாக்ஸ் அதிகாரிகளே ஆடிப்போய்விட்டனராம்.

“உங்கள் டிபார்ட்மென்ட்டில் உள்ள அதிகாரிகளில் நான்கில் மூன்று பங்கு பேர் என் நண்பர்கள்தான். என் நேர்மையை அவர்களிடம் விசாரித்துப் பாருங்கள்” என்று சொல்லிவிட்டு கெத்தாக வந்துள்ளார் வழக்கறிஞர் அமலநாதன். 

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் வீடுகளில் அதிரடி ரெய்டு நடத்திய வருமானவரித் துறை அதிகாரிகள், இவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட அவர்களுடைய நண்பர்கள், உறவினர்களையும் வளைத்தனர். அதில் சிக்கியவர்தான் வழக்கறிஞர் அமலநாதன். சிவகங்கை மாவட்டம், பாகனேரியைச் சேர்ந்தவர் இவர். சென்னையில் சட்டம் படித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் தொழில்செய்து வருகிறார். ராம மோகன ராவ் சர்வீஸுக்கு வந்து, சிறிய பொறுப்புகளில் இருந்த காலத்தில் இருந்து வழக்கறிஞர் அமலநாதன் அவருடன் நட்பில் உள்ளார். 

கடந்த 25 வருடங்களாக ராம மோகன ராவ் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தாலும், மணல் தொழில், பொதுப்பணித் துறை ஒப்பந்தங்கள் போன்றவற்றில் அமலநாதன் தலையைக்கொடுக்கவில்லை. ஆனால், ராம மோகன ராவ் மற்றும் அவரது மகன் நிறுவனங்கள் சம்பந்தமான வழக்குகளை முடித்துத் தருவது, அதற்கான மூத்த வழக்கறிஞர்களைப் பிடித்துத் தருவது என்ற ரீதியில் மட்டுமே இருந்துள்ளார். அதனால், தற்போதைய ரெய்டில் அமலநாதனிடம் இருந்தும் எதுவும் சிக்கவில்லை. ராம மோகன ராவுக்கு எதிராகவும் எதுவும் அமலநாதனிடம் இருந்து சிக்கவில்லை. மூன்று நாட்கள் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியும்கூட, கடைசிவரை ஒரு வார்த்தையைக்கூட ராம மோகன ராவுக்கு எதிராக  அமலநாதனிடம் இருந்து அவர்களால் வாங்க முடியவில்லை. வேறு எந்தவகையில்தான் அமலநாதன் பலனடைந்தார் என்றால்,  அதிகாரவர்க்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு, புரமோஷன், டிரான்ஸ்ஃபர் போன்ற விவகாரங்களைச் செய்து கொடுக்கும் மீடியேட்டராக அவர் செயல்பட்டார். அமலநாதன் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர். அந்தச் சமூகத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளருக்கும் இடையில் மீடியேட்டராகச் செயல்பட்டார். இதுபோன்று பல ஆண்டுகளாக மீடியேட்டராக அமலநாதன் செயல்பட்டு பலன் அடைந்தார். ஆனால், இப்போது ரெய்டில் அமலநாதன் வீட்டில் சிக்கிய பணம் மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். அதில் 6 லட்சம் ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகள். மீதமுள்ள 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்  புதிய ரூபாய் நோட்டுகள். அதற்கும் அமலநாதன் முறையாகக் கணக்குக் காட்டி உள்ளார். வருமானவரித் துறை அதிகாரிகளே துருவித் துருவி விசாரித்துவிட்டு அமலநாதனை அனுப்பிவிட்டனர். அவருடைய பணத்தில் ஒரு பகுதியையும், கைப்பற்றப்பட்ட கொஞ்சம் நகைகளையும் அமலநாதனையே எடுத்துப்போகச் சொல்லிவிட்டனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...