News
Loading...

எனக்கென்று யார் இருக்கிறார்கள்?

Jayalalithaa

``எனக்குள்ளும் சோகம், கோபம், அழுகை... எல்லாம் உண்டு. ஆனால், ஒரு தலைமைப் பொறுப்புக்கு வரும்போது, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது.’’

``என்னை இகழ்பவர்களுக்கு, என் வெற்றியின் மூலம் மட்டுமே பதில் சொல்வேன்.’’

``என் அம்மாவுடன் நிறைய நேரத்தைச் செலவழித்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் எனக்குள் எப்போதும் உண்டு.’’

``என் அம்மா இறந்தபோதும், எம்.ஜி.ஆர் இறந்தபோதும் காட்டில் தொலைந்த குழந்தையாகப் பரிதவித்தேன்.’’

``என் அரசியல் பாதையை எம்.ஜி.ஆர் மென்மையாக்கிவிட்டுச் செல்லவில்லை.’’

Jayalalithaa

``அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம். என்னை நல்லா படிக்கவெச்சு, சாதாரணமாக இருக்கிற நல்ல குடும்பத்துப் பெண் மாதிரி 18, 19 வயசிலே நல்ல இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால், நான் நாலு குழந்தைகளுக்குத் தாயாகியிருப்பேன்... ஹேப்பியாக. இத்தனை அப்ஸ் அண்ட் டவுன்ஸ் என் லைஃப்ல இருந்திருக்காது. வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாகப் போயிருக்கும்.’’

``குடும்ப அரசியல் என்னும் நச்சு மரம் தமிழகத்தில் வேர்களையும் விழுதுகளையும் பலப்படுத்திக் கொள்ளுமேயானால், அது தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்தாக முடியும்.’’

``எனக்கென்று யார் இருக்கிறார்கள்? நான் தவவாழ்க்கை வாழ்கிறேன்.’’

``உயிரை விடவேண்டுமானால், கட்சிக்காக விடத் தயார்.’’

Jayalalithaa
Jayalalithaa
Jayalalithaa

``மக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைக்கு அரசை எப்போதும் சார்ந்து இராமல், தங்களது சொந்தக் கால்களிலேயே நின்று தங்களுக்குத் தேவையானதை தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவுக்கு, அவர்களது பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.’’

Jayalalithaa

``வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட சவால்களையும் போராட்டங்களையும், துணிவோடும் உறுதியோடும் திடமாகவும் சந்தித்திருக்கிறேன். பெண் என்பதாலேயே எந்தச் சாதகமும் அனுகூலமும் ஒருவருக்கு ஏற்பட்டுவிடாது. அதிலும் குறிப்பாக அரசியலில் அதற்கு வாய்ப்பே இல்லை.’’

``எனக்கு என்று தனிப்பட்ட விருப்பங்கள் இல்லை; குடும்பம் இல்லை. நாட்டுக்காகப் பணியாற்றத்தான் நான் இங்கு இருக்கிறேன்.’’

``நான் மனஉறுதி படைத்தவள்; கடுமையாக உள்ளவள். இப்படி இல்லை என்றால், அரசியலில் எனக்கு ஏற்பட்ட கரடுமுரடான நிலையில் இருந்து மீண்டு வந்திருக்க முடியாது. இந்த நிலைக்கும் நான் வந்திருக்க முடியாது.’’

Jayalalithaa

``நான் மற்றவர்களை அனுசரிக்கும் திறன் வாய்ந்தவள்தான். ஆனால், எனக்கு என்று சில கொள்கைகள், எண்ணங்கள் உள்ளன. அதை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.’’

``நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவுமறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட ஒரு நிர்வாகத்தை நான் கொடுப்பேன்.’’

``தமிழக மக்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்...

`வருந்தாதே ஏழை மனமே
வரும்காலம் நல்ல காலம்
மனம்போல இன்பம் நேரும்
திருநாளும் வந்து சேரும்'. ’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்