News
Loading...

சபரிமலையில் பெண்கள் நுழையும் போராட்டத்துக்கு அனுமதி இல்லை: அறநிலையத்துறை

சபரிமலையில் பெண்கள் நுழையும் போராட்டத்துக்கு அனுமதி இல்லை: அறநிலையத்துறை மந்திரி பேட்டி

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைய அனுமதி கிடையாது.

சபரிமலை அய்யப்பன் பிரம்மசாரி என்பதாலும், கோவில் ஐதீகப்படியும் இந்த தடை காலம்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சில தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க உத்தரவிட கோரி இளம் வக்கீல்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்த பூமாதா பிரிகேட் என்ற அமைப்பு சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழையும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தது.

இந்த அமைப்பின் தலைவர் திருப்திதேசாய் என்பவர் மராட்டிய மாநிலத்தில் பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மகாலெட்சுமி கோவில், திரும்பகேசவர் சிவன் கோவில்களில் போராட்டம் நடத்தி பெண்கள் நுழைய அனுமதி பெற்றுத்தந்தவர்.

அவர் சபரிமலை கோவிலிலும் அடுத்த மாதம் தங்கள் அமைப்பைச் சேர்ந்த பெண்கள் கோவிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்துவார்கள் என்று கூறினார்.

இது பற்றி கேரள அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் நுழைவது தொடர்பான விவகாரம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கோவிலுக்குள் பெண்கள் நுழையும் போராட்டம் நடத்துவதை அரசு அனுமதிக்காது. கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை கோவிலின் ஆச்சாரம் மற்றும் சட்டத்திட்டங்களை யாரும் மீறக்கூடாது.

தற்போது இக்கோவிலின் நிர்வாகத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவனித்து வருகிறது. அதன்படி கோவில் நிர்வாகம் வகுத்த விதிமுறைபடிதான் நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...