News
Loading...

தொந்தரவு கொடுத்த வாலிபரை கண்டுபிடித்து அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க செய்த பெண்...

தொந்தரவு கொடுத்த வாலிபரை கண்டுபிடித்து அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க செய்த பெண்...

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த கல்வி ஆலோசகர் ஸ்ரீலட்சுமி சதீஷ் தற்போதைய நாட்களில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். 

இதற்கான காரணத்தையும் ஸ்ரீலட்சுமி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அவருடைய வலைத்தள பதிவானது பாராட்டுகளை பெற்று பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. பெண்களையும் அவருடைய பதிவு மகிழ்ச்சியடைய செய்து உள்ளது.

கடந்த சிலநாட்களாகவே ஸ்ரீலட்சுமிக்கு செல்போன் அழைப்புக்குகள் வந்து உள்ளது, பேசிய ஆண்கள் அனைவரும் மோசமாக பேசிஉள்ளனர். மேலும் அவருக்கு விலை என்ன என்றும் அவருடைய அமைதியை சீர்குலைக்கும் விதமாக பேசிஉள்ளனர். ஆனால் ஸ்ரீலட்சுமி அமைதியாக இருந்து உள்ளார். இந்த வேலையை அவருக்கு எதிராக யார் செய்தது என்பதை அவர் தெரிந்துக் கொள்ள சிறிது காலம் எடுத்துக் கொண்டு உள்ளது. முடிவில் அரசியல் கட்சியை சேர்ந்த உள்ளூர் இளைஞர் அணி தலைவர் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணை வாட்ஸ்-அப்பில் மோசமான தகவல்களுடன் பரப்பிவிட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. 

இதுதொடர்பாக ஸ்ரீலட்சுமி பேசுகையில், “கட்சியின் இளைஞர் அணி தலைவர்களிடம் இருந்து எனக்கு தொடர்ச்சியாக செல்போன் அழைப்புகள் வந்தன. இதுவே மோசமான தகவலை பரப்பியவர் யார் என்பதை அடையாளம் காண உதவியது. என்னிடம் பேசியவர்களிடம் மோசமான தகவல்களை பரப்பியவரை கட்சியில் இருந்து நீக்குவதாக உறுதிசெய்ய கேட்டுக் கொண்டேன். கல்வியின் வழியாக நான் வெற்றி அடைந்துவிட்டேன். என்னுடைய மரியாதையை நான் யாரிடமும் சரண் அடையசெய்யவில்லை, அதுபோக என்னுடைய பெருமையின் மீது கறைபடிய யாரையும் அனுமதிக்கவும் இல்லை,” என்று கூறிஉள்ளார். 

வாட்ஸ்-அப் பதிவு தொடர்பான தகவல்களை சேகரித்த அவர் காவல் நிலையம் செல்ல உள்ளதாக தெரிவித்து உள்ளார். 

இதனையடுத்து பொய்யான தகவலை பரப்பிய வாலிபரின் தந்தை  ஸ்ரீலட்சுமியிடம் பேசிஉள்ளார், மன்னிப்பு கோரிஉள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசுக்கு செல்லவேண்டாம் என எழுத்துப்பூர்வமாக எழுதி, மன்னிப்பு கோரினார். அந்த தந்தையின் கண்ணீரை பார்த்தப்போதுதான் என்னுடைய நடவடிக்கையில் சமாதானம் செய்துக் கொள்ள முன்வந்தேன். அவருடைய மகனின் கன்னத்தில் அடிப்பது போன்று உணர்ந்தேன், இதனால் என்ன நடக்கப்போவது என பின்னர் யோசித்தேன்... பின்னர் அவரிடம் அதற்கான தீர்வையும் கூறினேன் என்று கூறிஉள்ள ஸ்ரீலட்சுமி, உள்ளூர் அறக்கட்டளைக்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடையாக வழங்க கூறிஉள்ளார். அதற்கான ரசீதையும் கொடுக்க கூறிஉள்ளார். அப்படி செய்யவில்லை என்றால் காவல் நிலையம் செல்ல தயங்க மாட்டேன் என எச்சரித்து உள்ளார். 

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வாலிபர் ஸ்ரீ சித்ரா அறக்கட்டளை மையத்திற்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடையாக வழங்கிஉள்ளார். பின்னர் அதற்கான ரசீதையும் ஸ்ரீலட்சுமியிடம் வழங்கிஉள்ளார். ஆனால் வாலிபர் கட்சியில் இருந்து இதுவரையில் நீக்கப்படவில்லை. இதுதொடர்பான ரசீதை ஸ்ரீலட்சுமி தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். வாலிபரின் பெயரை மட்டும் மறைத்து உள்ளார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...