News
Loading...

மு.க.ஸ்டாலின், தி.மு.க வின் செயல் தலைவர் ஆகிறார்: பொதுக்குழுவில் முடிவு

மு.க.ஸ்டாலின், தி.மு.க வின் செயல் தலைவர் ஆகிறார்: பொதுக்குழுவில் முடிவு

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனால் அவர் கட்சிநிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

எனவே கட்சியில் தலைவரின் பணிகளை கவனிக்க செயல் தலைவர் பதவியை உருவாக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில் கருணாநிதி தலைமையில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்படும் என்றும் தி.மு.க செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்றும் தெரிகிறது.

மு.க.ஸ்டாலின் இப்போது தி.மு.க பொருளாளராகவும் சட்டசபை எதிர்கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். அவருக்கு செயல் தலைவர் பதவி அளிக்கப்பட்டால் புதிய பொருளாளராக தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...