News
Loading...

பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் ரயில்வே :டிக்கெட் கவுன்டர்களில் ஸ்வைப் மிஷின்

பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் ரயில்வே 12,000 டிக்கெட் கவுன்டர்களில் விரைவில் ‘ஸ்வைப் மிஷின்’

ருப்பு பணத்தை வெளிக்கொண்டு வரவும், கள்ள நோட்டை ஒழிக்கவும் ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8ம் தேதியன்று அறிவித்தார். இந்நிலையில், பணப்புழக்கமே கருப்பு பணத்துக்கு காரணம் என்றும், இதை தடுக்க மக்கள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜ ஆளும் மாநிலங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன.  

தற்போது நிலவி வரும் பணத்தட்டுப்பாட்டால் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ரயில்வே துறையும் ரொக்கமில்லாத பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். தற்போது டிக்ெகட் கவுன்டர்களில் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் நடைமுறைதான் உள்ளது. கிரடிட், டெபிட் கார்டுகள் உள்ளிட்டவை மூலம் பணபரிமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 12 ஆயிரம் டிக்கெட் கவுன்டர்களில் ஸ்வைப் மிஷின்கள் வைக்கப்பட உள்ளது. 

இதற்காக பொதுத்துறை, தனியார் வங்கிகளிடம் ரயில்வே அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் முதல்கட்டமாக இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. 1000 ஸ்வைப் மிஷின்களை ரயில்ேவக்கு உடனடியாக வழங்குவதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ‘டிக்கெட் கவுன்டர்களில் ஸ்வைப் மிஷின்களை பயன்படுத்துவதன் மூலம் ஊழியர்களுக்கு வேலைப்பளு குறைவதுடன், பணபரிவர்த்தனையில் வெளிப்படை தன்மை ஏற்படும்’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...