News
Loading...

மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

மிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது பற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது:-

முந்தைய காலங்களில் யாராலும் அணுகவே முடியாதவர்கள் என்ற எழுதப்படாத விதி இருந்தது. ஆனால் மோடியின் ஆட்சியில் அந்த விதி மாற்றப்பட்டுள்ளது.

யாராக இருந்தாலும் கண்காணிக்கப்படுவார்கள். தவறு செய்பவர்கள் தப்பிக்கவே முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை வேறு. இது வேறு என்று எடுத்துக்கொள்ள கூடாது. என் பணத்தை எடுக்க நான் வரிசையில் நிற்க வேண்டுமா? என்று சாதாரண மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைதான் சுருட்டி, பதுக்கி வைத்திருக்கிறார்கள். கள்ளப்பணமும், கணக்கில் காட்டாத பணமும் மோடி மட்டும் இவ்வளவு தீவிரமாக இறங்கி இருக்காவிட்டால் இப்படித்தான் பதுக்கப்பட்டு கொண்டே இருக்கும்.

வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய்க்காக மக்கள் அலைகிறார்கள். ஆனால் லட்சக்கணக்கானவர்களுக்கு வழங்கக் கூடிய கோடிக்கணக்கான பணத்தை சிலர் மூட்டை கட்டி வைத்திருக்கிறார்கள். அதைத்தான் மத்திய அரசு கண்டுபிடித்து பறித்து வருகிறது.

பிடிக்கப்படும் புதிய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் உடனடியாக வங்கிகள் மூலம் புழக்கத்துக்கு விடப்படுகிறது.

தமிழ்நாட்டில்தான் பதுக்கலும், கள்ளச்சந்தையும் அதிகம். பெரும்புள்ளிகளை பொறி வைத்து பிடிப்பது சாதாரண வி‌ஷயமல்ல. பல விமர்சனங்களை தாண்டி வர வேண்டும். அந்த துணிச்சலுடன் மோடி செயல்படுகிறார்.

பா.ஜனதா ஆட்சி நடக்காத மாநிலங்களில் மட்டுமே சோதனை நடப்பதாக திருமாவளவன் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த மாநிலங்களில் ஊழல் தலைமையும் இல்லை. ஊழல் தலைமை செயலாளரும் இல்லை என்று தான் கருத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...