News
Loading...

ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானம்!

ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானம்!

ஸ்ஸில் 10 கி.மீ தூர பயணத்திற்கு 1 மணி ட்ராபிக்கில் சிக்கினாலே முகம் சிவந்து பி.பி எகிற பதட்டமாகிறோம். பிளைட்டில்  நாசூக்காக ஷர்ட் கசங்காமல் செல்லும் பிஸினஸ் மாக்னட்களுக்கும் ஸ்லோமோஷன் பயணத்தினால் இதே கோபம் பிளஸ் எரிச்சல் எக்ஸ்ட்ரீமாக வரும்தானே! அவர்களுக்கான நவரத்தின தைல கூலிங் செய்திதான் இது. 

பூம் நிறுவனம் உருவாக்கி யுள்ள சூப்பர்சோனிக் எக்ஸ்பி1 விமானம்தான் ஒலியையே மிஞ்சும் வேகத்தில் உங்களை பயணிக்கச் செய்து மத்தாப்பாய் மலர வைக்கப்போகிறது. தற்போது மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ள இதில் விமானி அறை தவிர்த்து, 44 பேர் பயணிக்கலாம். 

நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு பயணிக்க 7 மணி நேரம் எனில், இவ்விமானத்தில் 3.5 மணிநேரம் பயணித்து டக்கென இறங்கி சின்சியர் சிகாமணியாக வேலை பார்க்கலாம். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சிட்னிக்கு செல்ல 15 மணி நேரமாகிறது என்றால் சூப்பர் சோனிக் எக்ஸ் பி1 மூலம் 6.45 மணி நேரம் செலவழித்தால் போதும் என்பது மிராக்கிள்தான். 

ஒலியை மிஞ்சும் சூப்பர் சோனிக் விமானம்!

பூம் டெக்னாலஜி நிறுவனத்தின் சிந்தனை முத்துதான் ‘‘இந்த சூப்பர்சோனிக் எக்ஸ் பி1. நான் சிறுவனாக இருந்தபோது ஹாங்காங்கில் வசித்த எங்கள் தாத்தாவைப் பார்க்க விமானத்தின் ஏறினால் அவர் வீட்டை அடையும்போது 18 மணிநேரத்தை செலவிட்டிருப்பேன். 

ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அவரை என்னால் பார்க்க முடியும். இவ்வளவு நேரத்தை பயணமே எடுத்துக்கொண்டால் எப்படி? என்று யோசித்ததில்தான் சூப்பர்சோனிக் எக்ஸ் பி1 பிறந்தது’’ என பால்ய நினைவு நதியில் நீச்சலடித்தபடி பேசுகிறார் பூம் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான பிளாக் ஸ்கால்.  

‘‘சூப்பர் சோனிக் விமானத்திற்கு முன்பு அந்த இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது கான்கார்டு விமானம்தான். பிரிட்டிஷ் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷனும், ஏரோஸ்பாட்டியல் என்ற ப்ரெஞ்ச் நிறுவனமும் இணைந்து கான்கார்டு விமானங்களை தயாரித்து வந்தன.  ஆனால் 2003 ஆம் ஆண்டிற்குப் பிறகு கான்கார்டு விமானங்கள் முழுக்க கைவிடப்பட்டன. ஏன்? எரிவாயுவில் மட்டுமே இயங்குவதும், முதலீட்டுக்கு மேல் துட்டு கிடைக்காததுமே காரணம். மேலும் 2003 ஆம் ஆண்டு கான்கார்டு விபத்தில் சிக்கி 113 நபர்கள் இறந்துபோனதும் ஒரு காரணமாகும்.   

முன்பு கான்கார்டை வடிவமைத்தவர்கள் சூப்பர்சோனிக் விமானத்திற்கான தரத்தையும் தொழில்நுட்பத்தையும் முறைப்
படுத்தவில்லை. ஆனால் நாங்கள் அதனை நேர்த்தியாகப் புரிந்துகொண்டு வடிவமைத்திருக்கிறோம்’’ நம் மனம் புல்லரிக்க பேசுகிறார் பூம் நிறுவன அதிகாரி பிளாக் ஸ்கால்.  சூப்பர்சோனிக் எக்ஸ்பி1 மணிக்கு 1451 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. 

கான்கார்டை விட 10 மடங்கு கூடுதல் வேகம். சாதாரண விமானங்களை விட 2 மடங்கு பாய்ச்சல். எல்லாம் சரி, ஐடியாவை வைத்து என்ன செய்ய? யாராவது நிதி கொடுத்தால்தானே கனவில் நினைத்ததை காரியமாக்க முடியும். 

பிளாக் ஸ்காலின் ஐடியாவை நன்கு புரிந்துகொண்ட வர்ஜின் க்ரூப் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் சூப்பர்சோனிக் விமானத்தை மேம்படுத்த கரன்சியை இறைக்க  ஒப்புக்கொண்டிருக்கிறார். சும்மா வருமா உதவி? பூம் நிறுவனத்தின் முதல் 10 விமானங்கள் வர்ஜின் நிறுவனத்திற்கு சுத்தபத்தமாக உருவாக்கி அளித்துவிடவேண்டும் என்பதுதான் ஜென்டில்மேன் ஒப்பந்தம்.   

‘‘வேகமாகச் செல்லும் கமர்சியல் வாகனங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது பேராசை. எனவேதான் பூம் நிறுவனத்தின் ஐடியாவை கேட்டதும் நான் ஒப்புக்கொண்டேன்’’ என மனதைத்  திறந்து பேசியிருக்கிறார் வர்ஜின் நிறுவனர் பிரான்சன். அதற்கேற்ப நிறுவனத்தின் எஞ்சின்களை ஜெனரல் எலக்ட்ரிக், ஹனிவெல் ஏவியானிக்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளன என்பது நம்பிக்கை அளிக்கும் தகவல்.    

வர்ஜின் - பூம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள எக்ஸ்பி1 டெமான்ஸ்ட்ரேட்டர் விமானங்களை டென்வரிலுள்ள சென்டெனியல் விமானநிலையம், கலிஃபோர்னியாவிலுள்ள எட்வர்ட்ஸ் ஏர்ஃபோர்ஸ் தளம் ஆகிய இரு இடங்களில் சோதித்துப் பார்க்கவுள்ளனர். ஒலியை விட வேகமாகச் செல்லும் தொழில்நுட்பம் மேக் 2.2 என பூம் நிறுவனத்தால் குறிப்பிடப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு சோதனை ஓட்டம் செய்யப்படவிருக்கும் இந்த விமானத்தில் ஒரு இருக்கைக்கு நீங்கள் 3 லட்சத்து 40 ஆயிரத்து 675 ரூபாய் கொடுத்தால் காலரைத் தூக்கிவிட்டு பயணிக்கலாம்.  

ஆனால் இந்த நிறுவனம் மட்டுமே இதுபோன்ற முயற்சியில் ஈடுபடவில்லை. நாசா, கான்கார்டு கிளப், ஏர்பஸ், ஸ்பைக் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் சூப்பர்சோனிக் விமானத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. போட்டியோ பொறாமையோ சல்லீசான குஷி சவாரி பயணிகளுக்கு நிச்சயம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.