News
Loading...

வன விலங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமி...!!

வன விலங்குகளுடன் காட்டில் வாழ்ந்த சிறுமி...!!

நைரோபி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வனவிலங்கு ஆவணப்பட தாயாரிப்பாளரின் மகள் ஆப்பிரிக்க காடுகளில் யானை சகோதரனுடனும் சிறுத்தை தோழனுடனும் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சில்வி ராபர்ட் - அலைன் டெக்ரே தம்பதியர் அடர்ந்த காடுகளில் வாழும் விலங்கினங்களை விரட்டிச் சென்று ஆவணப்படம் தயாரிப்பதில் வல்லவர்களாக விளங்கிவந்தனனர்.

ஆப்பிரிக்காவின் கென்யா, உகான்டா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் உள்ள காடுகளில் வசிக்கும் விலங்கினங்களை படம் பிடிப்பதற்காக இந்த தம்பதியர் கென்யா தலைநகரான நைரோபிக்கு சென்றபோது 1990-ம் ஆண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

டிப்பி என பெயரிடப்பட்ட அந்த குழந்தை வளர்ந்து, ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது பெற்றோருடன் அடர்ந்த காடுகளில் சுற்றித்திரியும் நிலை உருவானது. 5 டன் எடை கொண்ட 34 வயது காட்டு யானையை தனது சகோதரனாக ஏற்றுக்கொண்ட டிப்பி, சிறுத்தை, சிங்கம், பாபூன் குரங்குகள் மற்றும் கொடிய விஷப் பாம்புகளுடன் பயமின்றி விளையாட ஆரம்பித்தாள். காடுகளில் வாழும் சுலு இன நாடோடி மக்களுடனும் நட்பு பாராட்டி வளர்ந்த டிப்பி டெக்ரே தனது காட்டு வாழ்க்கையை வண்ணவண்ண புகைப்படங்களுடன் கூடிய புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

காட்டு விலங்குகளுடன் ஆத்மார்த்தமான மொழியில் கண்களின் மூலம் பேசியதாகவும், அதை புரிந்துகொண்ட விலங்குகள் தன்னுடன் பழகி, பதிலளித்து உறவாடியதாகவும் தனது நூலில் டிப்பி குறிப்பிட்டுள்ளார்.தற்போது 26 வயது இளம்பெண்ணாக வளர்ந்துவிட்ட டிப்பி பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்