News
Loading...

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த கள்ளநோட்டு கும்பல் கைது

2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த கள்ளநோட்டு கும்பல் கைது

விசாகப்பட்டணத்தில் போட்டோ ஸ்டுடியோவில் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு வெளியிட்டு உள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் ஜெராக்ஸ் எடுத்தும், போலியாக அச்சடித்தும் வெளியிடும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் போலீசிடம் சிக்கி வருகிறார்கள்.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டணத்தில் போட்டோ ஸ்டுடியோவில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்த மூன்று பேர் கொண்ட கும்பலில் இருவரை அரிலோவா போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சத்யநாராயணன் மற்றும் யுகாந்தர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மற்றொருவர் யேல்லாஜி என தெரியவந்து உள்ளது. இவர்கள் கலர் பிரிண்டிங் இயந்திரத்தை கொண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்படி தரமான காகிதங்களை வாங்கி ரூபாய் நோட்டுகளை பிரிண்டிங் செய்து உள்ளனர்.

இவ்வாறு அடிக்கப்பட்ட புதிய 2000 ரூபாய் நோட்டை சத்யநாராயணன் கைலாசகிரி பெட்ரோல் பாங்கில் கொடுத்து உள்ளார். முழுவதும் பெட்ரோல் நிரப்பி உள்ளார். இதனையடுத்து ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் அடைந்தவர்கள் போலீசிடம் தகவல் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையின்போது அவர்கள் போலியாக ரூபாய் நோட்டுகள் அச்சடித்தது தெரியவந்தது. விசாரணையின் போது சத்தியநாராயணன் மேலும் இருவரது பெயரை தெரிவித்து உள்ளார். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் அதிகபட்சமான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நகரில் புழக்கத்திற்கு விடவில்லை என தெரியவந்து உள்ளது.

இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் யேல்லாஜியை தேடும் பணியானது நடந்து வருகிறது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...